ஹனோய்: தங்கப் பதக்கங்
களுக்குக் குறிவைத்து தென்கிழக்காசிய விளையாட்டுகளில் களமிறங்கியுள்ள
சிங்கப்பூர் துப்பாக்கி சுடும் குழுவுக்கு வெற்றி மீது வெற்றி கிடைத்துள்ளது.
இப்போட்டியில் சிங்கப்பூர் துப்பாக்கி சுடும் குழு தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் 'பிஸ்டல்' துப்பாக்கி சுடும் போட்டியில் (குழுப் பிரிவு) டே சியூ ஹோங், டியோ ஷுன் சியே, அமேண்டா மாக் ஆகிய மூவரைக் கொண்ட குழு மற்ற குழுக்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.
இவர்கள் மொத்தம் 1,697 புள்ளிகளைக் குவித்தனர். தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மகளிருக்கான 10 மீட்டர் 'பிஸ்டல்' துப்பாக்கி சுடும் போட்டியில் (குழுப் பிரிவு) சிங்கப்பூர் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை ஏற்று நடத்தும் வியட்னாம் இரண்டாம் நிலையைப் பிடித்து வெள்ளி வென்றது. தாய்லாந்து வெண்கலம் வென்றது.
(இடமிருந்து) டே சியூ ஹோங், அமேண்டா மாக், டியோ ஷுன் சியே.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

