மனந்தளராது சாதித்த கில்கிறிஸ்ட்

மனந்தளராது சாதித்த கில்கிறிஸ்ட்

1 mins read

ஹனோய்: அண்­மை­யில் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளுக்­கான பில்­லி­யர்ட்ஸ் ஒற்­றை­யர் பிரி­வில் சிங்­கப்­பூ­ரின் பீட்­டர் கில்­கி­றிஸ்ட் வெள்ளி மட்­டுமே வென்று ஏமாற்­றம் அடைந்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று நடை­பெற்ற இரட்­டை­யர் பிரி­வில் அலெக்ஸ் புவா­னு­டன் இணைந்து அவர் தங்­கப்

பதக்­கம் வென்­றார். இறுதி ஆட்­டத்­தில் இவ்­வி­ரு­வ­ரும் மியன்­மார் குழுவை 3-1 எனும் புள்­ளிக் கணக்­கில் தோற்­க­டித்து தங்­கம் வென்­ற­னர்.

பில்­லி­யர்ட்ஸ் போட்­டி­யின் இரட்டை யர் பிரி­வில் சிங்­கப்­பூர் தங்­கம்

வென்­றி­ருப்­பது இதுவே முதல்­முறை.