ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 'சியான்சி' எனப்படும் சீனச் சதுரங்கம் முதல்முறையாக இவ்வாண்டு இடம்பெற்றுள்ளது.
இதில் சிங்கப்பூரின் ஆல்வின் வூ தங்கம் வென்றுள்ளார்.
கம்போடிய வீரரை அவர் நேற்று 1-0 எனும் புள்ளிக் கணக்கில் தோற்
கடித்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
வியட்னாமில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சீனச் சதுரங்கப் போட்டிகளில்
சிங்கப்பூர் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.