குத்துச்சண்டையில் மகுடம் சூடிய இந்திய வீராங்கனை

1 mins read

இஸ்­தான்­புல்: துருக்­கி­யில் நடை­பெற்ற மக­ளி­ருக்­கான உல­கக்

குத்­துச் சண்­டைப் போட்­டி­யில் இந்­தி­யா­வின் நிகாத் ஸரீன் வாகை சூடி­உள்­ளார். உல­கக் குத்­துச்­சண்டை போட்­டி­யில் மாபெ­ரும் வெற்­றி­யா­ளர் பட்­டத்தை வென்ற ஐந்­தா­வது இந்­திய வீராங்­கனை எனும் பெருமை

ஸரீ­னைச் சேரும். நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் தாய்­லாந்து வீராங்­க­னையை 5-0 எனும் புள்­ளிக்­க­ணக்­கில் ஸரீன் வீழ்த்­தி­னார்.

இதற்கு முன்பு ஆகக் கடை­சி­யாக 2018ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வுக்­காக மேரி கோம் இப்­போட்­டி­யில் தங்­கம் வென்­றார்.