வெல்­வது யார் - லிவர்­பூல், மேன்­சிட்டி ரசி­கர்­கள் கருத்து

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்­டி­யின் இறுதி ஆட்­டங்­கள் இன்­றி­ரவு நடை­பெ­ற­வுள்­ளன. இவற்­றுக்­காக குறிப்­பாக லிவர்­பூல், மான்­செஸ்­டர் சிட்டி ரசி­கர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர். பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் மான்­செஸ்­டர் சிட்டி தற்­பொ­ழுது லிவர்­பூ­லை­விட 1 புள்ளி அதி­கம் பெற்று முன்­னி­லை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில், இரு குழுக்­களும் இன்று போட்­டி­யி­டும் ஆட்­டங்­களே லீக் கிண்­ணத்தை வெல்­லப்­போ­வது யார் என்­பதை நிர்­ண­யிக்­கும். இது குறித்து இரு குழுக்­க­ளின் ரசி­கர்­க­ளின் கருத்­து­களை கேட்­ட­றிந்­தது தமிழ் முரசு.

லிவர்­பூல் ரசி­க­ரான 21 வயது அர­விந்­தன் கதி­ர­றி­வன், லிவர்­பூல் லீக் கிண்­ணத்தை வெல்ல வலு­வான வாய்ப்­புள்­ளது எனக் கூறு­கி­றார். லிவர்­பூல், உல்வ்ஸ் அணி­யு­டன் மோதும் ஆட்­டத்­தில் லிவர்­பூல் வெற்­றி­ய­டை­யும் என்­ப­தில் அதிக நம­பிக்கை கொண்­டுள்­ளார் இவர்.

அது­மட்­டு­மின்றி, மான்­செஸ்­டர் சிட்டி தனது இறுதி ஆட்­டத்­தில் ஆஸ்­டன் வில்லா அணி­யு­டன் மோத­வுள்­ளது.

ஆஸ்­டன் வில்­லா­வின் தற்­போ­தைய நிர்­வாகி, முன்­னாள் லிவர்­பூல் அணித் தலை­வர் ஸ்டீ­வன் ஜெரார்ட் என்­ப­தா­லும் அவ்­வ­ணி­யின் முக்­கிய ஆட்­டக்­கா­ர­ரான, பிலிப் கொட்­டின்யோ, என்­ப­தா­லும் அவர்­கள் லிவர்­பூல் லீக் பட்­டத்தை வெல்­லும் நோக்­கு­டன் சிட்­டியை எதிர்த்து கள­மி­றங்­கு­வர் என்­கி­றார் இவர்.

ஆஸ்­டன் வில்­லா­வு­டன் மான்­செஸ்­டர் சிட்டி சம­நிலை கண்­டாலே, லிவர்­பூல் கிண்­ணத்தை வெல்­வது உறுதி என்று இவர் கூறு­கி­றார்.

இவ­ரைப் போலவே, பா தர்­ஷன், 22, என்ற லிவர்­பூல் ரசி­கர் லிவர்­பூல் அணி வீரர்­கள் ஒவ்­வோர் ஆட்­டத்­தி­லும் சிறப்­பாக விளை­யாடி, இரு அணி­க­ளுக்­கும் இருந்த 14 புள்ளி இடை­வெ­ளியை ஒரு புள்­ளிக்கு குறைத்­துள்­ளதை சுட்­டு­கி­றார்.

பல சாம்­பி­யன்ஸ் லீக் ஆட்­டங்­கள், நான்கு நாள் இடை­வெ­ளி­யில் எவர்ட்­டன், மான்­செஸ்­டர் யுனை­டெட் போன்ற வலு­வான குழுக்­க­ளு­டன் ஆட்­டங்­கள், ஒரே வாரத்­தில் மான்­செஸ்­டர் சிட்டியுடன் இரண்டு ஆட்­டங்­கள் என நெருக்­க­டி­யான ஒரு மாத காலத்தை லிவர்­பூல் கடந்து வந்­துள்­ள­ள­தால் லிவர்­பூலே சிறந்த குழு என்று இவர் கூறு­கி­றார்.

இவர்­க­ளுக்கு மாறாக சில ரசி­கர்­கள் லிவர்­பூல் லீக் பட்­டம் வெல்­வது கடி­னம் என்­கின்­ற­னர். “லிவர்­பூல் இவ்­வாண்டு லீக் பட்­டத்தை வெல்­வது கடி­னம். ஏனெ­னில், மான்­செஸ்­டர் சிட்டி ஆஸ்­டன் வில்­லா­வி­டம் தோற்­கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.” என்­கி­றார் லிவர்­பூல் ரசி­க­ரான சர­வ­ணன் ஜெக­தீ­சன், 21.

மான்­செஸ்­டர் சிட்டி ரசி­கர்­கள், தங்­கள் அணி எப்­ப­டி­யா­வது லீக் பட்­டத்தை வென்­று­விட வேண்­டும் என்ற வேட்­கை­யு­டன் உள்­ள­னர். “லிவர்­பூல் லீக் பட்­டத்­வெதை வெல்­லக்­கூ­டாது.

ஒவ்­வொரு வார­மும் 2-1, 1-0 போன்ற குறு­கிய கோல் வித்­தி­யா­சத்­தில் ஆட்­டங்­களை வென்று 3 புள்­ளி­கள் பெற்­ற­னர்,” என்று கூறு­கி­றார் 21 வய­தான மான்­செஸ்­டர் சிட்டி ரசி­கர் நூருல் நாஜிப்.

மான்­செஸ்­டர் சிட்டி சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­தால் பிரி­மி­யர் லீக் பட்­டத்தை வென்­றால் சிறப்­பாக இருக்­கும் என இவர் கரு­து­கி­றார்.

நவ்­ஃபால் சலீம் என்ற 21 வய­தான மான்­செஸ்­டர் சிட்டி ரசி­கர் தனது அணி கண்­டிப்­பாக லீக் கிண்­ணத்தை வெல்­லும் என நம்­பு­கி­றார்.

கார­பாவ் கிண்­ணப் போட்­டி­யில் ஏற்­கெ­னவே வென்­றுள்ள லிவர்­பூல், லீக் பட்­டத்­தை­யும் வெல்­லு­மா­னால், அது பங்­கேற்­கும் சாம்­பி­யன்ஸ் லீக்,

எ­ஃப்ஏ கிண்ண இறு­திப் போட்டி ஆகி­ய­வற்­றி­லும் வெல்­லும் வாய்ப்பை அதி­க­ரித்­து­வி­டும், அது கூடாது என்­கி­றார்.

எந்த அணி ரசி­கர்­கள் காட்­டில் மகிழ்ச்சி வெள்­ளம் பெருக்­கெ­டுக்­கப் போகிறது என்­பது இன்­றி­ரவு தெரிந்­து­வி­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!