செய்­திக்­கொத்து

சது­ரங்­கம்: உலக வெற்­றி­யா­ளரை இரு­முறை வென்ற பிரக்­ஞா­னந்தா

சென்னை: செஸ்­ஸ­பிள் மாஸ்­டர்ஸ் என்ற இணைய அதி­வேக சது­ரங்­கப் போட்டி நடை­பெற்று வரு­கிறது. இதில் 16 வீரர்­கள் கலந்­து­கொண்டு சது­ரங்­கம் ஆடி வரு­கின்­ற­னர்.

இந்­தப் போட்­டி­யின் 5வது சுற்­றில் தமிழ்­நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்­ஞா­னந்தா, உலக வெற்­றி­யா­ள­ரான மேக்­னஸ் கார்ல்­சனை எதிர்­கொண்­டார்.

இந்­தப் போட்டி சம­நி­லை­யில் முடி­யுமோ என அனை­வ­ரும் எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யில், 40வது சுற்­றுக்குப் பிறகு கார்ல்­சன் செய்த ஒரு தவறு பிரக்­ஞா­னந்தா வெற்றி பெற வழி­வ­குத்­தது. கார்ல்­ச­னின் தவற்றைத் தனக்கு சாத­க­மா­கப் பயன்­

ப­டுத்தி காய்­களைச் சரி­யாக நகர்த்தி வெற்றி பெற்­றார் பிரக்­ஞா­னந்தா.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் நடை­பெற்ற போட்­டி­யி­லும் பிரக்­ஞா­னந்தா 3-0 என்ற கணக்­கில் கார்ல்­சனை வீழ்த்­திய நிலை­யில், இந்த ஆண்டு 2வது முறை­யாக கார்ல்­சனை அவர் வீழ்த்­தி­யுள்­ளது குறிப்பிடத்தக்கது.

தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்டு:

பேட்­மிண்­டன் இறு­திச் சுற்­றில் லோ

ஹனோய்: வியட்­னா­மின் ஹனோய் நக­ரில் நடை­பெ­றும் தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பேட்­மிண்­ட­னில் இறு­திச் சுற்­றுக்கு தகு­து­பெற்­றுள்­ளார் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த லோ கியன் இயூ.

நேற்று நடை­பெற்ற பர­ப­ரப்­பான ஒற்­றை­யர் அரை­யி­று­திப் போட்­டி­யில் வியட்­னா­மின் நுயன் தியன் மின் என்­ப­வரை 21-15, 10-21, 23-21 என மூன்று செட்களில் தோல்­வி­யின் விளிம்பு வரை சென்று தப்­பித்து வென்­றுள்­ளார் லோ.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கம் வென்றார் லோ.

நேற்றைய போட்டியில் லோ தமது வேக­மான ஆட்­டத்­தால் தொடக்­கம் முதலே போட்­டி­யில் ஆதிக்­கம் செலுத்­தி­னார்.

எனி­னும், லோ செய்த சிறு தவ­று­க­ளா­லும் இரண்­டா­வது செட்டில் முனைப்­பு­டன் நுயன் தியன் மின் விளை­யா­டி­ய­தா­லும் இரண்­டா­வது செட்டை வியட்­னா­மி­ய­ரான நுயன் 21-10 என்ற புள்­ளிக்­க­ணக்­கில் வென்­றார்.

வெற்­றி­யா­ளரை முடிவு செய்­வ­தற்­கான மூன்­றா­வது செட்டில் நடு­வ­ரின் பல முடி­வு­கள் லோவுக்கு எதி­ராக இருப்­பி­னும், இறு­தி­யில் லோ வெற்றி பெற்று இறு­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!