விளையாட்டுத் துறைக்கு ஒளிமயமான எதிர்காலம்

ஹனோய்: தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் திடல்­தட வீரர்­கள் மித­மிஞ்­சிய திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யன்­மூ­லம் சிங்­கப்­பூர் விளை­யாட்­டுக்கு ஒளி­ம­ய­மான எதிர்­கா­லம் இருப்­ப­தாக சிங்­கப்­பூர் விளை­யாட்­டுக் கழக நிர்­வாகி தெரி­வித்து உள்­ளார்.

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் நிறை­வ­டை­வ­தை­யொட்டி வியட்­னாம் தலை­ந­கர் ஹனோ­யில் நேற்று அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னர்.

ஹயட் ரீஜென்சி ஹோட்­ட­லில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சிங்­கப்­பூர் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் சூ சுன் வெய் பேசி­னார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் அணி சிறப்­பா­கச் செய்­துள்­ளது. நாம் சாதித்­து­விட்­டோம் என்­ப­தைப் பெரு­மை­யு­டன் கூறிக்­கொள்­கி­றோம்.

"இது­வரை பெற்­றி­ருக்­கும் சாத­னை­க­ளோடு நாம் திருப்தி அடைந்து­வி­டக்­கூ­டாது. இன்­னும் சிறப்­பான லட்­சி­யங்­க­ளுக்­குக் குறி­வைக்க வேண்­டும்.

"எனவே, நமக்கு நாமே வகுத்துக்­கொண்ட எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் இலக்­கு­க­ளை­யும் பூர்த்தி செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை நான் சொல்­லி­யாக வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

இருப்­பி­னும் அந்த இலக்­கு­கள் என்ன என்று அவர் விளக்­க­வில்லை.

சிங்­கப்­பூர் அணி நேற்­றுக் காலை வரை­யி­லான நில­வ­ரப்­படி 161 பதக்­கங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. 47 தங்­கம், 44 வெள்ளி, 70 வெண்­க­லப் பதக்கங்­களை உள்­ள­டக்­கிய எண்­ணிக்கை இது.

இறு­தி­நா­ளான நேற்­றும் போட்­டி­கள் நடை­பெற்­ற­தால் மேலும் சில பதக்­கங்­களை சிங்­கப்­பூர் வீரர்­கள் குவிக்க முயன்­று­கொண்டு இருந்­த­னர்.

சிங்­கப்­பூர் அணி­யில் 424 வீரர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். இவர்­கள் 33 விளை­யாட்­டு­க­ளுக்­கான போட்­டி­களில் கலந்­து­கொண்­ட­னர்.

பதக்கப் பட்­டி­ய­லில் ஐந்­தாம் இடத்­திற்கு முன்­னேறி இறு­தி­வரை அந்த இடத்­தைத் தக்­க­வைத்­துக் கொண்­டது சிங்­கப்­பூர்.

இருப்­பி­னும் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­னர் நடை­பெற்ற இரு தென்­கி­ழக்­கா­சி­யப் போட்­டி­களில் பெற்­ற­தைக் காட்­டி­லும் குறை­வான தங்­கப்­ப­தக்­கம் இம்­முறை கிடைத்­துள்­ளது.

2017ஆம் ஆண்டு கோலா­லம்­பூ­ரில் நடை­பெற்ற போட்­டி­களில் சிங்­கப்­பூர் அணி 58 தங்­கப்­ப­தக்­கங்­க­ளு­டன் 4ஆம் இடத்­தைப் பிடித்­தி­ருந்­தது.

அடுத்த போட்­டி­கள் 2019ஆம் ஆண்டு பிலிப்­பீன்­ஸில் நடை­பெற்­ற­போது சிங்­கப்­பூ­ருக்கு 53 தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

இம்­முறை சிங்­கப்­பூர் அணி ஐந்து தென்­கி­ழக்­கா­சி­யப் போட்டி சாத­னை­க­ளை­யும் 12 தேசிய சாத­னை­க­ளை­யும் 34 தனி­ந­பர் சாத­னை­க­ளை­யும் நிகழ்த்தி உள்­ளது.

மேலும், சிங்­கப்­பூ­ரின் நீச்­சல் வீரர்­கள் மூலம் அதி­கப் பதக்­கங்­கள் கிடைத்­தன. 21 தங்­கம், 11 வெள்ளி, 12 வெண்­க­லப் பதக்­கங்­களை அவர்­கள் வென்­ற­னர்.

சிங்­கப்­பூர் சார்­பாக இம்­முறை 245 அறி­முக வீரர்­கள் அனுப்­பப்­பட்­ட­னர்.

அணி வென்ற 161 பதக்­கங்­களில் 57 விழுக்­காடு, அதா­வது 61 பதக்­கங்­களை அறி­முக வீர்­கள் வென்று சாதித்­த­னர். மொத்த பதக்க எண்­ணிக்­கை­யில் இது கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு.

"பாதிக்கு மேற்­பட்­ட­வர்­கள் புதி­ய­வர்­க­ளாக இருந்­த­போ­தி­லும் நமது அணி சாதித்து உள்­ளது," என்­றார் திரு சூ.

சிங்கப்பூர் அறிமுக வீரர்கள் மூன்றில் ஒரு பங்கு பதக்கங்களை வென்று சாதித்தனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!