ஏமாற்றத்தில் மட்ரிட்: 2025 வரை பிஎஸ்ஜியில் நீடிக்கும் எம்பாப்பே

பாரிஸ்: ரியால் மட்­ரிட்­டின் எதிர்­பார்ப்பை மீண்­டும் தகர்த்­துள்­ளார் கிலி­யான் எம்­பாப்பே, 23.

ரியால் மட்­ரிட்­டின் அழைப்பை ஏற்று அந்த அணி­யு­டன் இணை­வார் என்று உலக காற்­பந்து ரசி­கர்­கள் கருதி இருந்த நிலை­யில், பிஎஸ்ஜி அணி­யி­லேயே 2025 ஆண்டு வரை தொடர்ந்து நீடிக்­கும் வகை­யில் சனிக்­கி­ழமை மூன்­றாண்­டுக்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டார் எம்­பாப்பே.

இத­னால், அவரை விடா­மல் துரத்தி வந்த 13 முறை ஐரோப்­பிய சாம்­பி­ய­னான மட்­ரிட் ஏமாற்­ற­ ம­டைந்­தது.

பிரான்­சின் முன்­னணி பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்- ஜெர்­மைன்) அணிக்­காக 2018ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் இவர், புதிய ஒப்­பந்­தம் தமக்­குப் பெரு­ம­கிழ்ச்சி தரு­வ­தா­கக் கூறி­னார். பிஎஸ்­ஜி­யு­ட­னான இவ­ரது தற்­போ­தைய ஒப்­பந்­தம் அடுத்த மாதம் காலா­வதி­யா­கிறது.

பிரான்ஸ் லீக்-1 போட்­டி­யில் மெட்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்­கில் வென்ற பின்­னர் இவ­ரது புதிய ஒப்­பந்­தம் குறித்த அறி­விப்பு வெளி­யா­னது. இந்­தப் போட்­டி­யில் ஹாட்­ரிக் கோல்­களை அடித்து பிஎஸ்­ஜி­யின் வெற்­றிக்­குப் பாதை போட்­டார் எம்­பாப்பே.

பிரான்­சுக்கு உல­கக் கிண்­ணத்தை வென்று தந்து உல­கின் முன்­னணி வீரர்­களில் ஒரு­வ­ரா­கத் திக­ழும் இவர், “பிரான்­சி­லேயே தொடர்ந்து நீடிப்­பது குறித்து பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றேன். பாரிஸ் எனது சொந்த நக­ரம் என்­பதை நான் எப்­போ­தும் சொல்லி வந்­துள்­ளேன்,” என்று பிஎஸ்­ஜி­யில் நீடிப்­பது குறித்து கூறி­னார்.

“விளை­யாடி வெற்­றிக்­கிண்­ணங்­களை வெல்­வ­தற்­காக நான் எதை அதி­க­மாக நேசித்­தேனோ அத­னையே இனி­யும் தொட­ரு­வேன்,” என்றார் எம்­பாப்பே.

இவ­ரது புதிய ஒப்­பந்­தம் குறித்த அறி­விப்பை பிஎஸ்ஜி குழுத் தலை­வர் நாசர் அல்-கெலைஃபி அறி­வித்­தார்.

“எம்­பாப்பே நம்­மு­டன் 2025ஆம் ஆண்­டு ­வ­ரைத் தொட­ரப்போகி­றார் என்ற நல்ல செய்­தி­யைத் தெரி­விக்­கி­றேன்,” என அவர் கூறி­ய­தும் கூடி­யி­ருந்த ரசி­கர்­கள் எம்­பாப்பே பெயரை மீண்­டும் மீண்­டும் உரக்­கக் கூறி மகிழ்ச்­சியை வெளிப்­ ப­டுத்­தி­னர்.

“பிஎஸ்­ஜி­யைப் பிர­தி­நி­திப்­ப­தற்­கான எம்­பாப்­பே­யின் கடப்­பாடு நமது குழுவின் வர­லாற்­றில் அற்­பு­த­மா­ன­தொரு மைல்­கல்,” என்­றார் நாசர்.

லயனல் மெஸ்ஸி, ஜூனி­யர் நெய்­மர் ஆகி­ய முன்னணி வீரர் களும் பிஎஸ்ஜி அணி­யில் உள்­ளார்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!