இந்தோனீசியாவை வீழ்த்திய சிங்கப்பூர்

இந்தோனீசியாவை வீழ்த்திய சிங்கப்பூர்

1 mins read
93f18f8e-73d3-4b65-80de-25bf3de1ceea
ஓசிபிசி நீர்நிலையத்தில் நடைபெற்ற நீர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் ஏ அணியின் ஜெய்டன் சீ (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: நீர்ப்­பந்து விளை­யாட்­டுக்­கான இன்டர் நேஷன்ஸ் கிண்­ணம் 2022 போட்­டி­யில் சிங்­கப்­பூர் அணி இந்­தோ­னீ­சிய அணியை 16-2 கோல் கணக்­கில் தோற்­க­டித்­தது.

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் 27 தங்­கப்­ப­தக்­கங்­களை வென்ற வர­லாறு கொண்ட குடி­ய­ர­சின் நீர்ப்­பந்­துக் குழு, புதி­தாக அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்ள இன்டர் நேஷன்ஸ் நீர்ப்­பந்­துப் போட்­டி­யில் பங்­கேற்­றது. இம்­முறை இந்த விளை­யாட்டு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும் இந்த வட்­டா­ரத்­தில் தாங்­கள் சிறப்­பாக விளை­யா­டக் கூடி­ய­வர்­கள் என்­பதை சிங்­கப்­பூர் வீரர்­கள் நிரூ­பித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் ஏ அணி நேற்று இந்­தோ­னீ­சி­யாவை 16-2 கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது. ஏற்­கெ­னவே தாய்­லாந்து, மலே­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய அணி­க­ளை­யும் வென்ற சிங்­கப்­பூர் ஏ அணி, மொத்­தம் 81 கோல்­க­ளைப் போட்­டது.