அரைஇறுதியில் தோற்றார் சிந்து

அரைஇறுதியில் தோற்றார் சிந்து

1 mins read
b17f6fda-596d-4c8a-9e55-26d118b8b824
வெற்றியைத் தனதாக்கும் முயற்சியில் துடிப்புடன் ஆடிய பி.வி. சிந்து. படம்: இபிஏ -

பேங்­காக்: தாய்­லாந்து பேட்மிண்­டன் பொதுவிருது மகளிர் ஒற்றை யில் பிரிவில் இந்­தி­யா­வின் பி.வி.சிந்து அரை­யி­று­திச்­சுற்­றில் தோல்வி கண்டாா்.

தர­வ­ரி­சை­யில் 6ஆம் இடத்­தில் இருந்த சிந்து 17-21, 16-21 என்ற நோ் செட்­டுகளில், நடப்பு ஒலிம்­பிக் சாம்­பி­ய­னும் சீன வீராங்கனை­யு­மான சென் யு ஃபெய்யி­டம் தோற் றார்.

இந்த ஆட்­டத்தை 43 நிமி­டங்­களில் முடி­வுக்­குக் கொண்­டு­வந்தாா் ஃபெய்.

இதற்கு முன் 2019ஆம் ஆண்டி லும் ஃபெய்யிடம் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருந்தாா் சிந்து. இந்த ஆட்­டத்­துக்கு முன் 10 முறை ஃபெய்யை சந்­தித்­தி­ருந்த சிந்து, அதில் 6ல் வெற்­றி­யைப் பதிவு செய்­தி­ருக்­கிறாா்.

ஆனால், இந்த 11ஆவது ஆட்­டத்­தில் சிந்­து­வுக்கு சவால் அளிக்­கும் வகை­யில் ஆக்­ரோ­ஷ­மாக ஆடினாா் ஃபெய். தனது வழக்­க­மான ஆட்­டத்­தி­லி­ருந்து சற்றே தடு­மா­றிய சிந்து, பல­முறை தவ­று­கள் செய்தாா்.

புள்­ளி­களை முத­லில் கைப்­பற்­றி­யது சிந்­து­வாக இருந்­தா­லும், நேரம் செல்­லச் செல்ல ஃபெய் தனது தடுப்­பாட்­டத்தை வலுப்ப டுத்தி சிந்­துவை தடு­மா­றச் செய் தார். அவ்­வப்­போது சிந்து மீண்­டா­லும் இறு­தி­யில் ஃபெய் வச­மா­னது வெற்றி.