வெற்றிக் கனியை சுவைத்தபோதிலும் மனம் உடைந்து குமுறிய லிவர்பூல்

லிவர்பூல்: உல்வ்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் அபாரமாக விளையாடி 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே உல்வ்ஸ் குழு கோல் போட்டு முன்னிலை வகித்தது.

ஆனால் சிறிதளவும் பதற்றம் அடையாமல் சாடியோ மானே, முகம்மது சாலா, ராபர்ட்சன் மூலம் கோல்களைப் போட்டு லிவர்பூல் வெற்றிக் கனியைப் பறித்தது.

ஆனால் ஆட்டம் முடிந்ததும் லிவர்பூலின் புகழ்பெற்ற ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் கொண்டாட்டம் ஏதும் இல்லை.

மாறாக, அதன் ரசிகர்கள் சோகமே உருவாக இருந்தனர்.

ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் சிட்டி வெற்றி கோலைப் போட்டு வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றதே இதற்குக் காரணம்.

சிட்டி அதன் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் 93 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது.

லிவர்பூல் 92 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

வில்லாவிடம் சிட்டி சமநிலை கண்டிருந்தாலோ அல்லது தோல்வி அடைந்திருந்தாலோ லிவர்பூல் கிண்ணம் ஏந்திருக்கும்.

கடைசி நேரத்தில் சிட்டி வெற்றி கோலைப் போட்டதால் லீக் பட்டத்தை நூலிழையில் லிவர்பூல் இழந்தது. லிவர்­பூல் ஏற்­கெ­னவே லீக் கிண்­ணத்­தை­யும் எ­ஃப்ஏ கிண்­ணத்­தை­யும் வென்­று­விட்­டது.

நேற்று முன்­தி­னம் லீக் பட்­டத்­தை­யும் தனக்­குச் சொந்­த­மாக்­கி­இருந்­தால் 'ஹாட்­ரிக்' சாத­னை­யாகி இருக்­கும்.

ஆனால் 'ஹாட்­ரிக்' சாத­னை­யைப் பதிவு செய்­யும் வாய்ப்பு அதற்கு இன்­னும் இருக்­கிறது.

சிங்கப்பூர் நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரி­சில் நடை­பெ­றும் சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யின் இறுதி ஆட்­டத்­தில் ரியால் மட்­ரிட் குழு­

வு­டன் லிவர்­பூல் மோது­கிறது.

தோல்வியிலும் ஓர் ஆறுதல்

இதற்கிடையே, லீக் போட்டியில் ஆக அதிக கோல்களைப் போட்ட வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி விருது லிவர்பூல் நட்சத்திர வீரர் முகம்மது சாலாவுக்கும் ஸ்பர்ஸ் குழுவின் தென்கொரிய வீரரான சோன் ஹியூங் மின்னுக்கும் வழங்கப்பட்டது.

இருவரும் தலா 23 கோல்கள் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நார்விச் சிட்டியை 5-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் பந்தாடியது.

இதில் சோன் இரண்டு கோல்களைப் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் நான்காவது இடத்தை ஸ்பர்ஸ் பிடித்து அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

தங்க காலணி விருது வென்றிருப்பதைத் தம்மால் நம்ப முடியவில்லை என்று உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் சோன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!