ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நடைபெற்ற காற்பந்துப் போட்டியில் போட்டியை ஏற்று நடத்திய வியட்னாம் முத்திரை பதித்தது.
ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியிலும் பெண்களுக்கான காற்பந்துப் போட்டியிலும் வியட்னாம் தங்கம் வென்றது.
ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் வியட்னாமும் தாய்லாந்தும் மோதின. இதில் 1-0 எனும் கோல் கணக்கில் வியட்னாம் வெற்றி பெற்றது.
மகளிருக்கான இறுதி ஆட்டத்திலும் 1-0 எனும் கோல் கணக்கில் வியட்னாம் தாய்லாந்தை வீழ்த்தியது. ஆண்களுக்கான வெண்கலப் பதக்க ஆட்டத்தில்
மலேசியாவை பெனால்டி முறையில்
இந்தோனீசியா 4-3 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. கூடுதல் நேரம் முடிந்தபோது இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டிருந்தன.

