ஆதிக்கம் செலுத்தியும் ஆதங்கம்

ஆதிக்கம் செலுத்தியும் ஆதங்கம்

3 mins read
50c8de8e-8638-4fb6-925b-54833464fb43
சிறப்பாக விளையாடியும் தோல்வி அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தலையில் கை வைத்துப் புலம்பிய லிவர்பூல் வீரர் சாடியோ மானே.(இடது படம்) லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா வலை நோக்கி அனுப்பிய பந்தைப் பாய்ந்து தடுத்த ரியால் மட்ரிட் கோல்காப்பாளர் கோட்வா (நடுவில்). கோட்வா மிகுந்த விழிப்புடன் இருந்து சிறப்பாக செயல்பட்டதால் லிவர்பூல் குழுவால் இறுதி வரை கோல் போட முடியாமல் போனது.படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

பாரிஸ்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் ரியால் மட்­ரிட் வெற்றி பெற்று கிண்­ணம் ஏந்­தி­யது.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்­டத்­தில் லிவர்­பூலை அது 1-0 எனும் கோல் கணக்­கில் தோற்­

க­டித்­தது.

ஆனால் ஆட்­டம் தொடங்­கி­ய­தி­லி­ருந்து லிவர்­பூல் குழு­தான் ஆதிக்­கம் செலுத்­தி­யது.

தாக்­கு­தல் மேல் தாக்­கு­தல் நடத்­திய லிவர்­பூல் பல கோல் வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யது.

சில வாய்ப்­பு­களை அது நூலி­ழை­யில் தவ­றவிட்­டது.

ஆனால் லிவர்­பூல் ஒரு கோல்­கூட போட முடி­யா­மல் தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கிக்­கொண்­ட­தற்கு

முக்­கிய கார­ண­மாக ரியா­லின் கோல்­காப்­பா­ளர் கோட்வா விளங்கினார்.

இடை­வே­ளை­யின்போது கோல் ஏது­மின்றி இரு குழுக்­களும் சம­நி­லை­யில் இருந்­தன.

பிற்­பாதி ஆட்­டத்­தி­லும் தாக்­கு­த­லில் லிவர்­பூல் தொடர்ந்து தீவி­ரம் காட்­டி­யது.

ஆனால் கடு­க­ள­வும் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் விளை­யா­டிய கோட்வா, எதி­ர­ணி­யின் கோல் முயற்­சி­கள் அனைத்­தை­யும்

தவி­டுப்­பொ­டி­யாக்­கி­னார்.

இந்­நி­லை­யில், ஆட்­டத்­தின் போக்­குக்கு மாறாக 59வது நிமி­டத்­தில் ரியால் மட்­ரிட் கோல்

போட்­டது.

கோல் போட தனக்­குக் கிடைத்த சொற்ப வாய்ப்­பு­களில் ஒன்­றைப் பயன்­ப­டுத்தி அது பந்தை வலைக்­குள் அனுப்­பி­யது.

தாக்­கு­த­லில் அதிக கவ­னம் செலுத்­திய லிவர்­பூல் சற்று அசந்த நேரம் பார்த்து ரியா­லின் வினி­சி­யஸ் ஜூனி­யர் கோல் போட்­டார்.

அதை அடுத்து, ஆட்­டத்­தைச் சமன் செய்ய லிவர்­பூல் மேற்­கொண்ட முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடிய அக்­கு­ழு­வின் ஆட்­டக்­கா­ரர்­கள் விரக்தி

அடைந்­த­னர்.

குறிப்­பாக, லிவர்­பூ­லின் நட்­சத்­திர வீரர் முகம்­மது சாலா­வுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது. அவர் மிகச் சிறப்­பாக விளை­யாடி கோல்

வேட்­டை­யில் தீவி­ர­மாக இறங்­கி­ய­போ­தி­லும் அதிர்ஷ்ட தேவதை அவ­ருக்­குக் கைகொ­டுக்­க­வில்லை. அது­மட்­டு­மல்­லாது, என்ன செய்­தா­லும் தடைக்­கல்­லாக, மிகப் பிடி­வா­த­மாக நின்­று­கொண்­டி­ருந்த கோட்­வாவை அவ­ரால் முறி­ய­டிக்­க­வும் முடி­ய­வில்லை.

இறுதி வரை முன்­னி­லை­யைத் தக்­க­வைத்­துக்­கொண்ட ரியால் கிண்­ணத்­தைத் தனக்­குச் சொந்­த­மாக்­கிக்­கொண்­டது.

ரியா­லின் இந்த வெற்­றி­யின் மூலம், நான்கு முறை சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ண­தக்தை வென்ற முதல் பயிற்­று­விப்­பா­ளர் எனும் பெருமை அக்­கு­ழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் கார்லோ அன்­சிலோட்­டி­யைச் சேரும்.

ஏசி மிலான், ரியால் மட்­ரிட் ஆகிய குழுக்­க­ளின் பயிற்­று­விப்­பா­ளர் என்­கிற முறை­யில் சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ணத்தை அவர் தலா இரண்டு முறை வென்­றுள்­ளார்.

கடந்த ஏழு ஆண்­டு­களில் ரியால் மட்­ரிட் நான்கு முறை சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ணம் வென்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இறுதி ஆட்­டம் முடிந்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப்­பின் வார்த்­தை­களில் அக்­கு­ழு­வின் மன­வே­தனை எதி­ரொ­லித்­தது.

"மிகச் சிறப்­பாக விளை­யாடி னோம். ஆனால் திட்­ட­மிட்­டப்­படி எங்­க­ளால் விளை­யாட முடி­யா­மல் போனது. எப்­படி இருந்­தா­லும் நாங்­கள் நினைத்­தது போல செயல்­பட்­டி­ருக்க முடி­யாது.

"இதற்கு ரியா­லின் வியூ­கம் கார­ணம். தற்­காப்­பில் அதிக கவ­னம் செலுத்­தும் வகை­யில் ரியால் வியூ­கம் வகுத்­தி­ருந்­தது. தற்­காப்­புப் பணி­யில் அது பல ஆட்­டக்­கா­ரர்­களை ஈடுபடுத்தியது.

"அத்­த­கைய சூழ­லில் தாக்­கு­தல்­கள் நடத்­து­வது எளி­தல்ல. அதை­யும் மீறி நாங்­கள் கோல் வேட்­டை­யில் இறங்­கி­னோம். ஆனால் இலக்கை அடையத் தவறிவிட்டோம்," என்று கிளோப் தெரி­வித்­தார்.

இந்த இறுதி ஆட்­டம் முத­லில் ரஷ்­யா­வில் செயிண்ட் பீட்­டர்ஸ்­பர்க் நக­ரில் நடை­பெற இருந்­தது. ஆனால் உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­துள்ள கார­ணத்­தி­னால் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் ஆட்­டம் பாரி­சில் நடை­பெற்­றது.

பாதுகாப்பு நடவடிக்கை:தாமதமாகத் தொடங்கிய ஆட்டம்

எதிர்­பா­ராத வித­மாக பாது­காப்பு தொடர்­பான விவ­க­ராங்­கள் எழுந்­த­தால் இறுதி ஆட்­டம் தாம­த­மா­கத் தொடங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரத்­தில் தொடங்­கா­மல் ஏறத்­தாழ 36 நிமி­டங்­கள் கழித்து ஆட்­டம் தொடங்­கி­யது.

விளை­யாட்­ட­ரங்­கத்­துக்­குள் ரசி­கர்­கள் சிலர் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு வர முயன்­ற­தால் இந்­நிலை ஏற்­பட்­ட­தாக பிரெஞ்சு காவல்­துறை கூறி­யது.