கடைசி நேரத்தில் பிரான்சை காப்பாற்றிய எம்பாப்பே

2 mins read
e44218cd-8df3-4fed-808e-ee85d4123291
ஆட்டம் முடிய ஏறத்தாழ ஏழு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது பிரான்சின் கிலியன் எம்பாப்பே (வலது) அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது. படம்: ஏஎஃப்பி -

வியேன்னா: நேஷன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஆஸ்­தி­ரியா­வும் பிரான்­சும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டு சம­நிலை கண்­டன.

மாற்று ஆட்­டக்­கா­ர­ரா­கக் கள­மி­றங்கி ஆட்­டத்­தின் கடை­சி­க்

கட்­டத்­தில் பிரான்­சின் கிலி­யன் எம்­பாப்பே மட்­டுமே கோல் போடா­மல் இருந்­தால் ஆஸ்­தி­ரியா வெற்றி பெற்­றி­ருக்­கும்.

இந்த ஆட்­டத்­தில் சம­நிலை கண்­ட­தன்­மூ­லம் அரை­யி­றுதி ஆட்­டத்­துக்­குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரான்­சுக்கு இருக்­கிறது.

முற்­பாதி ஆட்­டத்­தில்

ஆஸ்­‌தி­ரி­யா­வின் ஆண்ட்­ரி­யஸ் வெய்­மான் கோல் போட்டு தமது அணியை முன்­னி­லைக்­குக் கொண்டு சென்­றார்.

ஆனால் ஆட்­டம் முடிய கிட்­டத்­தட்ட ஏழு நிமி­டங்­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­த­போது எம்­பாப்பே அனுப்­பிய பந்து வலை­யைத் தொட்­டது.

இது­வரை மூன்று ஆட்­டங்­களில் கள­மி­றங்­கி­யுள்ள பிரான்ஸ் குருப் 1ல் இரண்டு புள்­ளி­களை மட்­டுமே பெற்று கடைசி இடத்­தில் இருக்­கிறது. முதல் இடத்­தில் டென்­மார்க் இருக்­கிறது. இரண்­டா­வது இடத்­தில் ஆஸ்­தி­ரி­யா­வும் மூன்­றா­வது இடத்­தில் குரோ­வே­ஷி­யா­வும் தலா நான்கு புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளன.

"பிரான்ஸ் மேலும் பல கோல்­க­ளைப் போட்­டி­ருக்க வேண்­டும். கோல் போட எங்­க­ளுக்­குப் பல வாய்ப்­பு­கள் கிடைத்­தும் அவற்றை நழு­வ­விட்­டோம். இது எனக்கு ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது," என்று பிரான்ஸ் குழு­வின்

பயிற்­று­விப்­பா­ளர் டிடியே டேஷோம்

தெரி­வித்­தார்.

மற்­றோர் ஆட்­டத்­தில் டென்­மார்க்கை 1-0 எனும் கோல் கணக்­கில் குரோ­வே­ஷியா வீழ்த்­தி­யது.

பிற்­பாதி ஆட்­டத்­தில் மாரியோ பச­லிச் போட்ட கோல் குரோ­வே­ஷி­யா­வுக்கு வெற்­றி­யைத் தேடித் தந்­தது. இப்­போட்­டி­யில் டென்­மார்க் முதன்­மு­றை­யா­கத் தோல்­வி­யைச் சந்­தித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­காப்­பில் சக்­கை­போடு போட்ட குரோ­வே­ஷிய குழு, சிறப்­பாக விளை­யாடி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்தி வெற்­றி­யைப் பதிவு செய்­து­கொண்­டது.

ஆட்­டத்­தின் 69 நிமி­டத்­தில் குரோ­வே­ஷி­யா­வுக்கு கார்­னர் வாய்ப்பு கிடைத்­தது. அதன்மூலம் அனுப்­பப்­பட்ட பந்தை வலைக்­குள் சேர்த்­தார் பச­லிச்.