'இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும்'

'இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும்'

1 mins read

புதுடெல்லி: ஜப்பான் தலைநகர் தோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டி­யில், இந்­திய ஆண்­கள் ஹாக்கி அணி வெண்­க­லப் பதக்­கம் வென்­றது.

மக­ளிர் அணி நான்காவது இடத்­தைப் பிடித்­தது.

இந்­நி­லை­யில் 2028ஆம் ஆண்­டில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்­பிக் போட்­டி­யில் இந்­திய ஹாக்கி அணி உச்­சத்தை எட்­டும் என்று இந்­திய விளை­யாட்டு ஆணை­யத்­தின் முன்­னாள் இயக்­கு­ந­ரும் ஒடிசா ஹாக்கி சம்­மே­ளன இயக்­கு­ந­ரு­மான டேவிட் ஜான் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது அணி­யில் உள்ள ஜூனி­யர் ஹாக்கி வீர்ர்­கள், 2028ஆம் ஆண்­டுக்­குள் 300 அனைத்துலகப் போட்­டி­களில் பங்­கேற்­றி­ருப்­பார்­கள் என்­றும் இதன் மூலம் ஒவ்­வொரு வீர­ருக்­கும் அதிக அனு­ப­வம் கிடைக்­கும் என்­றும் டேவிட் ஜான் கூறி­னார்.

இத­னால் எந்­த­வொரு

சூழ­லை­யும் சமா­ளிக்­கும் பக்­கு­வத்தை அவர்­கள் பெற்­றி­ருப்­பார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஜெர்­மனி, ஆஸ்­தி­ரே­லியா, பெல்­ஜி­யம், ஹாலந்து ஹாக்கி அணி­களும் சிறப்­பாக விளை­யாடி வரு­கின்­றன என்­று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தங்­கப் பதக்­கம் வெல்­லும் அள­விற்கு இந்­திய ஹாக்கி அணி வீரர்கள் மிகவும் சிறப்­பாக செயல்­ப­டு­வார்­கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய மகளிர் அணியும் பதக்கத்துக்குக் குறிவைத்துள்ளது.