எஃப்1: பத்து இடங்கள் பின்னிருந்து தொடங்கும் ஃபெராரி வீரர்

எஃப்1: பத்து இடங்கள் பின்னிருந்து தொடங்கும் ஃபெராரி வீரர்

1 mins read

ஆன்­டே­ரியோ (கனடா): ஃபெராரி குழு சார்­பில் ஃபார்முலா 1 கார் பந்­த­யங்­களில் பங்­கேற்­று­வ­ரும் சார்ல்ஸ் லெக்­லெர்க், இப்­ப­ரு­வத்­தில் பட்­டம் வெல்­லும் முயற்­சி­யில் சற்­றுப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்ளது.

இயந்­தி­ரத்தை மிகை­யா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­குத் தண்­ட­னை­யாக, இன்று நடக்­க­வுள்ள கன­டிய கார் பந்­த­யத்­தில் லெக்­லெர்க் பத்து இடங்­கள் பின்­னி­ருந்து பந்­த­யத்­தைத் தொடங்க வேண்­டும்.

ஒரு பரு­வத்­தில், ஒரு பந்­தய காரில் இரண்டு மின்­ன­ணுக் கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களை மட்­டுமே ஒரு குழு பொருத்த வேண்­டும். ஆனால், கன­டிய கார் பந்­த­யத்­திற்­கான லெக்­லெர்க்­கின் காரில் ஃபெராரி குழு மூன்­றா­வது ஒரு மின்­ன­ணுக் கட்­டுப்­பாட்டு அமைப்­பைப் பொருத்­தி­யி­ருக்­கிறது.