ஒருநாள் போட்டியில் 498 ஓட்டங்களை விளாசி இங்கிலாந்து உலக சாதனை

ஆம்ஸ்­டல்­வீன் (நெதர்­லாந்து): அனைத்­து­லக ஒரு­நாள் கிரிக்­கெட் போட்டி வர­லாற்­றில் தனது சாத­னை­யைத் தானே முறி­ய­டித்­தது இங்­கி­லாந்து அணி.

மூன்று ஒரு­நாள் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக ஆய்ன் மோர்­கன் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து அணி நெதர்­லாந்து சென்­றுள்­ளது. முதல் ஒரு­நாள் போட்டி நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. முத­லில் பந்­த­டித்த இங்­கி­லாந்து அணி­யில் ஃபில் சால்ட் (122), டேவிட் மலான் (125), ஜோஸ் பட்­லர் (ஆட்­ட­மி­ழக்­கா­மல் 162) என மூவர் சதம் விளாச, அவ்­வணி 50 ஓவர்­களில் நான்கு விக்­கெட் இழப்­பிற்கு 498 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

ஒரு­நாள் போட்டி வர­லாற்­றில் ஓர் இன்­னிங்­சில் எடுக்­கப்­பட்ட அதி­க­பட்ச ஓட்­டம் இது­தான். 2018ல் ஆஸ்­தி­ரேலிய அணிக்கு எதி­ராக இங்கி­லாந்து அணி 481 ஓட்­டங்­களை எடுத்­ததே முன்­னைய சாதனை. பட்­லர் 47 பந்­து­களில் நூறு ஓட்­டங்­களை எட்­டி­னார்.

இப்­போட்­டி­யில் இங்­கி­லாந்து 26 சிக்­சர்­களை விளா­சி­ய­தும் புதிய உலக சாதனை. அத்­து­டன், அவ்வணி 36 பவுண்­ட­ரி­க­ளை­யும் அடித்­தது. பவுண்­டரி, சிக்­சர் வகை­யில் மட்­டும் முதன்­மு­றை­யாக ஒரே இன்­னிங்­சில் 300 ஓட்­டங்­க­ளுக்­கு­மேல் எடுக்­கப்­பட்­டது.

நெதர்­லாந்து 266 ஓட்­டங்­களை மட்­டும் எடுத்துப் படுதோல்வி அடைந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!