மரடோனோ மரணம்: எட்டு பேர் மீது நீதிமன்ற விசாரணை

மரடோனோ மரணம்: எட்டு பேர் மீது நீதிமன்ற விசாரணை

1 mins read
dc89c6c2-4fb9-4e18-898a-30db228bb5af
முன்னைய படம் -

முன்னாள் அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் மரணத்தின் தொடர்பில் எட்டு மருத்துவ ஊழியர்கள் மீது நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

நீதிமன்ற விசாரணைக்கான தேதி முடிவுசெய்யப்படவில்லை.

காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளராக சிலரால் கருதப்படும் மரடோனோ, 2020ஆம் ஆண்டு மாண்டார். அப்போது அவருக்கு 60 வயது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பராமரிப்பாளர்கள் அவரை சரிவரக் கவனித்துக்கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்ற போக்கைப் பின்பற்றியதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.