சவுத்ஹேம்டன்: மகளிர் ஐரோப்பிய காற்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டபோதிலும் முதல்
சுற்றின் கடைசி ஆட்டத்தில்
இங்கிலாந்து கோல் வேட்டையில்
இறங்கியது.
மிகுந்த முனைப்புடன், இடைவிடாது தாக்குதல் நடத்திய இங்கிலாந்து கோல் மழை பொழிந்து வடஅயர்லாந்தை 5-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.
கடந்த திங்கட்கிழமையன்று நார்வேயை இங்கிலாந்து வேட்டையாடி 8-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் தொடர் தோல்வி
களைச் சந்தித்த நார்வே காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று முன்தினம் அது ஆஸ்திரியாவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.

