போராடி வென்ற சுவீடன்

போராடி வென்ற சுவீடன்

1 mins read
b6184b75-2014-4d1c-8ca8-cf5be806153e
தொடர் தாக்குதல்களை நடத்தி பெல்ஜியத்தைத் திணறடித்த சுவீடன் மகளிர் வெற்றி பெற்று தங்கள் கிண்ணப் பயணத்தைத் தொடர்கின்றனர். அரையிறுதியில் இங்கிலாந்துடன் சுவீடன் மோதுகிறது.படம்: ஏஎஃப்பி -

மான்­செஸ்­டர்: மக­ளி­ருக்­கான ஐரோப்­பி­யக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யின் அரை­யி­று­திக்கு

சுவீ­டன் தகு­தி­பெற்­றுள்­ளது.

காலி­றுதி ஆட்­டத்­தில் மிகக் கடு­மை­யா­கப் போராடி ஆட்­டத்­தின் கடை­சிக்­கட்­டத்­தில் கோல் போட்டு 1-0 எனும் கோல் கணக்கில் பெல்­ஜி­யத்தை சுவீ­டன் மக­ளிர் வீழ்த்­தி­னர்.

நாளை மறுநாள் நடை­பெ­றும் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­

கி­லாந்தை அவர்­கள் எதிர்­கொள்­வர். தற்­காப்­பில் கவ­னம் செலுத்தி திடீர் தாக்­கு­தல்­களை நடத்­தும் உத்­தியை பெல்­ஜி­யம் கையாண்­டது. இத­னால் கோல் போட

சுவீ­டன் சிர­மப்­பட்­டது. முப்­ப­துக்­கும் மேற்­பட்ட தாக்­கு­தல்­களை நடத்தி, ஆட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­தி­யும் சுவீ­டன் மக­ளி­ரால் கோல் போட முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

ஆட்­டத்­தின் 25வது நிமி­டத்­தில் சுவீ­டன் அனுப்­பிய பந்து வலை­யைத் தொட்­டது. இருப்­பி­னும், ஆஃப்சைட் கார­ண­மாக அது

நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

பிற்­பாதி ஆட்­டத்­தி­லும் சுவீ­டன் தாக்­கு­த­லில் தீவி­ரம் காட்­டி­யது.

இருப்­பி­னும், பெல்­ஜி­யம் மக­ளி­ரின் தற்­காப்பு அரண் பிடி­வா­த­

மாக நிற்க, ஆட்­டத்­தின் வெற்­றி­யா­ளரைக் கூடு­தல் நேரம் அல்­லது பெனால்­டி­கள் மூலம்­தான்

நிர்­ண­யிக்க முடி­யும் என்று பர­வ­லா­கப் பேசப்­பட்­டது.

ஆனால் கூடு­தல் நேரத்­துக்­குச் செல்ல விரும்­பாத சுவீ­டன், அதற்கு முன்­ன­தா­கவே வெற்­றிக் கனி­யைப் பறித்­து­விட வேண்­டும் என்ற முனைப்­பு­டன் இருந்­தது.

ஆட்­டத்­தின் கடைசி வினா­டி­களில் சுவீ­ட­னுக்கு கார்­னர் வாய்ப்பு கிடைத்­தது.

பெல்­ஜி­யத்­தின் பெனால்டி எல்­லைக்­குள் அனுப்­பப்­பட்ட பந்து சுவீ­ட­னின் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் லின்டா செம்­பி­ரான்ட்­டி­டம் சென்­றது. பெல்­ஜி­யம் ஆட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கு­வ­தற்­குள் சுவீ­ட­னின் வெற்றி கோலை அவர் போட்­டார்.