டிரினிடாட்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ஓட்டங்களைக் குவித்தது.
309 ஓட்ட வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
இந்திய அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹொசைனும் ஷெப்பர்டும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

