இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் நீச்சல் வீரர்

இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் நீச்சல் வீரர்

1 mins read
ffe39a23-45f7-4bad-8125-55eccc80fced
-

பர்மிங்ஹம் காமன்­வெல்த் போட்­டி­யில் ஆண்­க­ளுக்­கான 50 மீட்­டர் வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்­சல் போட்­டிக்­கான இறு­திச் சுற்­றுக்கு சிங்­கப்­பூ­ரின் டியோங் சென் வெய் தகுதி பெற்­றுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அரை­யு­று­திச் சுற்­றில் பந்­த­யத்தை ஆக விரை­வாக முடித்த வீரர்­கள் பட்­டி­ய­லில் அவர் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 50 மீட்­டர் பந்­த­யத்தை அவர் 23.24 வினா­டி­களில் முடித்­தார். அப்­பட்­டி­ய­லில் போட்­டியை ஏற்று நடத்­தும் இங்­கி­லாந்­தின் பெஞ்­ச­மின் பிர­வுட் முதல் இடத்­தை­யும் டிரி­னி­டாட் அண்ட் டொபா­கோ­வின் டிலன் கார்ட்­டர் மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­த­னர்.

இறு­திச் சுற்­றில் இதே நிலை நீடித்­தால் 24 வயது டியோங் பதக்­கம் வெல்­லும் வாய்ப்பு அதி­கம் உள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த மாதம் நடை­பெற்ற நீச்­சல் போட்­டி­யில் 50 மீட்­டர் வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்­சல் போட்­டியை முடிக்க டியோங் இதை­விட சிறப்­பாக 23.03 வினா­டி­கள் மட்­டுமே எடுத்­துக்­கொண்­டார்.

இறு­திச் சுற்று சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று அதி­காலை 2 மணி அள­வில் நடை­பெற்­றி­ருக்­கும்.

அரையிறுதிச் சுற்றில் மின்னல் வேகத்தில் நீந்தி முடித்த சிங்கப்பூர் வீரர் டியோங் சென் வெய் (இடது).

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்