புதுச் சீருடை இல்லை, காலணி இல்லை, போட்டி உணர்வு மட்டுமே உள்ளது; இலங்கை வீரர் குமுறல்

புதுச் சீருடை இல்லை, காலணி இல்லை, போட்டி உணர்வு மட்டுமே உள்ளது; இலங்கை வீரர் குமுறல்

1 mins read
aec7e0cf-603f-46d7-8251-b09681e4df6e
-

பர்­மிங்­ஹம்: இலங்­கையை உலுக்கி வரும் மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­கடி, காமன்­வெல்த் போட்­டி­களில் பங்­கெ­டுக்­கும் அந்­நாட்டு வீரர்­க­ளை­யும் வாட்டி வதைக்­கிறது. புதிய சீரு­டை­கள், கால­ணி­கள் போன்­ற­வற்றை வாங்க இலங்கை அணி­யி­ன­ரி­டம் போதிய பணம் இல்லை என்று அந்த அணி­யின் தலை­வர் டம்­பத் ஃபெர்னாண்டோ வருத்­தம் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், போட்­டி­களில் சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டும் என்று இலங்கை வீரர்­கள் முனைப்புடன் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. போட்­டிக்­காக இங்­கி­லாந்­துக்கு வரு­வ­தற்கு முன்பே இலங்­கை­யில் பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மா­கப் பல சவால்­க­ளைச் சந்­தித்­த­தாக அந்­நாட்­டின் சீரு­டற்­ப­யிற்­சிப் போட்டி வீரர் ருச்­சிரா ஃபெர் னாண்டோ கூறி­னார்.

இலங்கை வீரர் ருச்­சிரா ஃபெர்னாண்டோ.

படம்: ருச்சிரா ஃபெர்னாண்டோ