செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

கானாவைப் பந்தாடிய இந்தியா

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை இந்திய ஹாக்கி மகளிர் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் கானாவுடன் இந்தியா மோதியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தி கோல் வேட்டையில் இறங்கிய இந்தியா, 5-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

இந்தியாவின் 14 வயது வீராங்கனை அசத்தல் வெற்றி

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான சுவர்ப்பந்துப் போட்டியில் இந்தியாவின் 14 வனது அனாஹத் சிங், முதல் சுற்று ஆட்டத்தில் கிரனெடைன்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உகாண்டாவுக்காகக் களமிறங்கும் 12 வயது நட்சத்திரம்

பர்மிங்ஹம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான மேசைப்பந்துப் போட்டியில் உகாண்டாவைப் பிரதிநிதித்து 12 வயது ஜெமிமா நகவாலா களமிறங்குகிறார். சிங்கப்பூரின் நட்சத்திர வீராங்கனை ஃபெங் தியன்வெய்யைவிட இவர் 23 ஆண்டுகள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமிமா, உகாண்டாவின் ஆகச் சிறந்த மேசைப்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட்டைப் புறக்கணித்து நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சென்னையில் நடைபெறும் அந்தப் புகழ்பெற்ற சதுரங்க போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதையடுத்து, சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்திச் சென்றது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் தந்திரம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.