காற்பந்துப் பருவத்தை சிறப்பாகத் தொடங்கிவைத்த லிவர்பூல்

ஆண்டுதோறும் இங்கிலாந்து காற்பந்துப் பருவத்தைத் தொடங்கிவைக்கும் கம்யூனிட்டி ஷீல்ட் ஆட்டத்தை லிவர்பூல் வென்றுள்ளது.

சென்ற பருவம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற மான்செஸ்டர் சிட்டியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.

ஒருவகை நட்புமுறை விருதைப் போல் கருதப்படும் கம்யூனிட்டி ஷீல்ட் ஆட்டத்தில் ஆண்டுதோறும் கடந்த பருவத்தின் பிரிமியர் லீக் வெற்றியாளர் அணியும் எஃப்ஏ கிண்ணத்தை வென்ற அணியும் மோதும்.

அண்மைக் காலமாகவே இங்கிலாந்து காற்பந்தில் சிட்டியும் லிவர்பூலும்தான் ஆகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளன.

சிட்டி புதிதாக வாங்கியிருக்கும் நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் இந்த ஆட்டத்தில் சோபிக்கவில்லை.

அதே வேளையில் லிவர்பூலின் புதிய நட்சத்திரம் டார்வின் நுனெஸ் சிறப்பாக ஆடி ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் தனது அணியின் மூன்றாவது கோலைப் போட்டார்.

லிவர்பூலின் இதர கோல்களைப் போட்டவர்கள் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னொல்ட், மோ சாலா ஆகியோர்.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் லிவர்பூலை முன்னுக்கு அனுப்பினார் அலேக்சாண்டர் ஆர்னோல்ட்.

70வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் சிட்டியில் புதிதாகச் சேர்ந்துள்ள ஜூலியன் அல்வாரெஸ்.

83வது நிமிடத்தில் பெனால்டி வாய்பைக் கோலாக்கினார் சாலா.

அடுத்த வாரம் புதிய இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்துப் பருவம் தொடங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!