16 ஆண்டுகளில் முதல்முறையாக பலோன் டு'வோர் விருதுக்கு முன்மொழியப்படாத மெஸ்ஸி

16 ஆண்டுகளில் முதல்முறையாக பலோன் டு'வோர் விருதுக்கு முன்மொழியப்படாத மெஸ்ஸி

1 mins read
5b6044fe-6bb6-4ce1-9305-8357c8819dda
-

பாரிஸ்: அர்ஜென்டினாவின் நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதுக்கு முன்மொழியப்படவில்லை.

பலோன் டு'வோர் எனறழைக்கப்படும் இவ்விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ள 30 வீரர்களில் மெஸ்ஸி இடம்பெறவில்லை.

2006ஆம் ஆண்டிலிருந்து இவ்விருதுக்குத் தொடர்ந்து முன்மொழியப்பட்டவர் மெஸ்ஸி. மேலும், 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும்

பலோன் டு'வோர் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் ஒன்றை வகித்து வந்தார். 2018ஆம் ஆண்டு மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

சென்ற ஆண்டுக்கான பலோன் டு'வோர் விருதை வென்ற மெஸ்ஸி, 2007ஆம் ஆண்டிலிருந்து இவ்விருதை ஏழு முறை கைப்பற்றியிருக்கிறார். காற்பந்து வரலாற்றில் பலோன் டு'வோரை ஆக அதிக முறை வென்றவர் மெஸ்ஸி.

இளம் வயதிலிருந்தே ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் முத்திரை பதித்து நட்சத்திரமாக உருவெடுத்த 35 வயது மெஸ்ஸி சென்ற பருவம் பிரான்சின் பிஎஸ்ஜி எனப்படும் பாரிஸ் செயின்ட் ஜர்மான் அணியில் சேர்ந்தார். பிஎஸ்ஜியில் அவரால் இதுவரை அதிகம் சோபிக்கமுடியவில்லை.

அதுவே மெஸ்ஸி பலோன் டு'வோர் விருதுக்கு முன்மொழியப்படாததற்கு முக்கியக் காரணம்.