முன்மொழியப்படாத மெஸ்ஸி

பாரிஸ்: அர்­ஜென்­டி­னா­வின் நட்­சத்­தி­ரம் லய­னல் மெஸ்ஸி 2005ஆம் ஆண்­டுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக உல­கின் ஆகச் சிறந்த காற்­பந்து வீர­ருக்­கான விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை. பேலன் டி'ஓர் என­ற­ழைக்­கப்­படும் இவ்­வி­ரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 30 வீரர்­களில் மெஸ்ஸி இடம்­பெறவில்லை.

2006ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­வி­ரு­துக்­குத் தொடர்ந்து முன்­மொழி­யப்­பட்­ட­வர் மெஸ்ஸி. மேலும், 2007ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வோர் ஆண்­டும் பேலன் டி'ஓர் பட்­டி­ய­லின் முதல் மூன்று இடங்­களில் ஒன்றை வகித்து வந்­தார்.

2018ஆம் ஆண்டு மட்­டும்­தான் இதற்கு விதி­வி­லக்கு.

சென்ற ஆண்­டுக்­கான பேலன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, 2007ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­விருதை ஏழு முறை கைப்­பற்­றி­யிருக்­கி­றார். காற்­பந்து வர­லாற்­றில் பேலன் டி'ஓர் விருதை ஆக அதிக முறை வென்­ற­வர் மெஸ்ஸி.

இளம் வய­தி­லி­ருந்தே ஸ்பெ­யினின் பார்­சி­லோனா அணி­யில் முத்­திரை பதித்து நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுத்த 35 வயது மெஸ்ஸி சென்ற பரு­வம் பிரான்­சின் பிஎஸ்ஜி எனப்­படும் பாரிஸ் செயின்ட் ஜெமேன் அணி­யில் சேர்ந்­தார். பிஎஸ்­ஜி­யில் அவ­ராால் இது­வரை அதி­கம் சோபிக்­க­மு­டி­ய­வில்லை.

அதுவே மெஸ்ஸி பேலன் டி'ஓர் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­ப­டாததற்கு முக்­கி­யக் கார­ணம்.

பிஎஸ்­ஜி­யின் மற்­றொரு நட்­சத்­தி­ர­மான பிரே­சி­லின் நேமா­ரும் முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை.

இவ்­வாண்டு விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளோ­ரில் முன்­னணி வகிப்­ப­வர் ஸ்பெயினின் ரியால் மட்­ரிட் அணி­யின் பிரெஞ்சு நட்­சத்­தி­ரம் கரீம் பென்­ஸீமா. முதன்­முறை­யாக பேலன் டி'ஓர் விருதை வெல்­வது பென்­ஸீ­மா­வின் இலக்கு.

ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக் அணி­யில் பிர­ப­ல­ம­டைந்து அண்­மை­யில் பார்­சி­லோ­னா­வில் சேர்ந்த போலந்து நட்­சத்­தி­ரம் ராபர்ட் லெவண்டொவ்ஸ்கியும் முன்­மொழி­யப்­பட்­டுள்­ளார். சென்ற ஆண்­டின் பேலன் டி'ஓர் விருது லெவண்டொவ்ஸ்கிக்கு வழங்­கப்­படா­தது பல­ருக்கு அதி­ருப்தி அளித்­தது.

மெஸ்­ஸிக்கு அடுத்­த­ப­டி­யாக விருதை ஆக அதிக முறை வென்­றி­ருக்­கும் போர்ச்சுகலின் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ இம்­முறை­யும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளார். 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 2018ஆம் ஆண்­டு­வரை மெஸ்ஸி அல்­லது ரொனால்­டோ­தான் இவ்­வி­ருதை வென்று வந்­த­னர்.

2008ஆம் ஆண்டு இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் அணி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டில் இருந்­த­போது ரொனால்டோ முதன்­மு­றை­யாக பேலன் டி'ஓர் விருதை வென்­றார். அதற்­குப் பிறகு இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு விளை­யா­டிய வீரர்­கள் யாரும் விருதை வென்­ற­தில்லை.

சென்ற ஆண்டு மீண்­டும் யுனை­டெட்­டில் சேர்ந்­தார் 37 வயது ரொனால்டோ. இவ்­வாண்­டுக்­கான பேலன் டி'ஓர் விருதை அவர் கைப்­பற்­றி­னால் 14 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் வீரர் ஒரு­வர் விருதை வென்­ற­தாக இருக்­கும்.

எனி­னும், பென்­ஸீ­மா­தான் இவ்­வாண்­டுக்­கான விருதை வெல்­வார் என்று பரவலாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அவ்­வாறு நிகழ்ந்­தால் அது மெஸ்ஸி, ரொனால்டோ சகாப்­தம் நிறை­வுக்கு வரு­வ­தற்­கான அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.

பேலன் டி'ஓர் விருது: 16 ஆண்டுகளில் காணாத அபூர்வ நிகழ்வு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!