ஆசிய கிண்ணத்துக்குத் தயாராகும் கோஹ்லி

மும்பை: ஓய்­வில் இருந்த இந்­திய கிரிக்­கெட் வீரர் விராத் கோஹ்லி இம்மாதம் தொடங்­கவி­ருக்­கும் ஆசிய கிண்­ணத்­துக்­குத் தன்­னைத் தயார்­ப­டுத்­திக்­கொள்­ளத் தொடங்­கி­விட்­டார். அண்­மை­யில் இந்­தி­யா­வும் மேற்கிந்­தி­யத் தீவு­களும் இடம்­பெற்ற தொட­ரில் கோஹ்லி பங்­கேற்­க­வில்லை.

கடந்த சுமார் இரண்டு நாள்­களாக 'பிகேசி' எனப்­படும் பாண்­டிரா-குர்லா நிலை­யத்­தில் இருக்­கும் மும்பை கிரிக்­கெட் சங்­கத்­தின் உள்­ள­ரங்கு கிரிக்­கெட் கழ­கத்­தில் முன்­னாள் இந்­திய அணித்­த­லை­வரான கோஹ்லி பயிற்சி செய்து­வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தான் விளை­யா­டும் இந்­திய பிரி­மி­யர் லீக் அணி­யான ராயல் சேலஞ்­சர்ஸ் பெங்­க­ளூர் அணி­யின் வீரர்­கள், அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் சஞ்­சய் பங்­கார் ஆகி­யோ­ரு­டன் கோஹ்லி பயிற்­சி­யில் ஈடு­பட்­டார்.

தான் மேற்­கொண்ட பயிற்­சி­யைக் காணொ­ளி­யா­கப் பதி­வு­செய்து கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று அதை இன்ஸ்­ட­கி­ராம் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தார் கோஹ்லி. எதிர்­பார்த்­த­படி அந்­தக் காணொளி பல­ரால் பகி­ரப்­பட்­டது.

எதிர்­பார்த்த வண்­ணம் விளை­யா­டா­த­தால் அண்­மைக் கால­மாக பல­ரின் கண்­ட­னத்­திற்கு ஆளா­னார். கடந்த வெள்­ளிக்­கிழமை­யன்று சுமார் ஒன்­றரை மணி­நே­ரத்­துக்­குப் பயிற்சி செய்­தார் கோஹ்லி.

ஆசிய கிண்­ணத்­தின் 20 ஓவர்­ ஆட்­டங்­க­ளைக் கொண்ட போட்­டி­யில் பல தரப்­பி­ன­ரின் கவ­னம் கோஹ்லி மீது இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. டி20 இந்திய அணியில் தனது இடத்தை மீட்டுக்கொள்ள கோஹ்லி மீது நெருக்குதல் இருந்து வருகிறது.

டி20 ஆசிய கிண்ணத்தில் இந்­தி­யா­வும் அதன் பரம வைரி­யான பாகிஸ்­தா­னும் மூன்று முறை மோதக்­கூ­டும்.

ஆசிய கிண்ணம் இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!