சின்சினாட்டி: ஓய்வுபெறப்போவதாக அண்மையில் அறிவித்த அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியின் முதல் சுற்றில் பிரிட்டனின் இளம் நட்சத்திரம் எம்மா ரடுகானுவைச் சந்திக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. செரினாவுக்கு வயது 40, ரடுகானுவுக்கு 19 வயது.
டென்னிஸ் கிராண்ட் சிலாம் விருதை 23 முறை வென்றுள்ள செரினா, தான் ஓய்வுபெறும் நாளை நோக்கி எண்ணத் தொடங்கலாம் என்று சென்ற வாரம் அறிவித்திருந்தார்.
இம்மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க பொதுவிருதுப் போட்டியே இவர் பங்கேற்கவுள்ள கடைசி போட்டியாக இருக்கும்.

