அகில இந்திய காற்பந்துச் சம்மேளனத்திற்கு எதிரான தடை விலக்கப்பட்டது

அகில இந்திய காற்பந்துச் சம்மேளனத்திற்கு எதிரான தடை விலக்கப்பட்டது

1 mins read
8940168d-5cec-48b1-852d-1b1b8676fff4
தடையை விலக்கியது 'ஃபிஃபா' எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம். படம்: ஏஎஃப்பி -

'ஏஐஎஃப்எஃப்' எனும் அகில இந்திய காற்பந்துச் சம்மேளனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம் விலக்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இந்தியாவால் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 17 வயதுக்குக் கீழ் உள்ள விளையாட்டாளர்களுக்கான பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தமுடியும்.

அகில இந்திய காற்பந்துச் சம்மேளனத்தைக் கண்காணிக்கக் குழு இருக்கவேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

அந்த நிபந்தனையை உச்சநீதிமன்றம் மீட்டுக்கொண்ட பிறகு தடை விலக்கப்பட்டது.