நீரஜ் சோப்ரா: டயமண்ட் லீக் வெற்றி இந்தியாவுக்கு முக்கியமானது

நீரஜ் சோப்ரா: டயமண்ட் லீக் வெற்றி இந்தியாவுக்கு முக்கியமானது

1 mins read
6b009138-93a7-40ed-931b-53d4a8b8c4a6
இந்தியாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. படம்: இபிஏ -

டயமண்ட் லீக் திடல்தடப் போட்டிகளில் வெற்றிகண்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

போட்டிகளில் 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றிகண்ட 24 வயது சோப்ரா, இந்த வெற்றி இந்தியாவுக்கு முக்கியமான ஒரு நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.

டயமண்ட் லீக்கில் தனது முதல் முயற்சியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2023ஆம் ஆண்டு உலக திடல்தடப் போட்டிகளுக்குத் தகதிபெற்றார் சென்ற ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கம் வென்ற சோப்ரா.