வெற்றிப் பாதையில் மான்செஸ்டர் யுனைடெட்

வெற்றிப் பாதையில் மான்செஸ்டர் யுனைடெட்

1 mins read
2ada095a-decd-4932-b3a6-c7df8cae720b
சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஒற்றை கோலைப் போட்டார் புருனோ ஃபெர்னாண்டஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

சவுத்ஹேம்டன்: இங்­கி­லி‌ஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துத் தொட­ரில் தோல்­வி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளது மான்­செஸ்­டர் யுனை­டெட். நேற்று சவுத்­ஹேம்­ட­னுக்கு எதி­ரான ஆட்­டத்தை 1-0 என்ற கோல்­க­ணக்­கில் வென்­றது மான்­செஸ்­டர் யுனை­டெட்.

லிவர்பூல் அணியை சென்ற வாரம் வென்ற மான்செஸ்டர் யுனைடெட் அதைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்வதை தமது குழு உறுதி செய்ய வேண்டும் என்று யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது.

முற்­பாதி ஆட்­டம் கோல் எது­வும் விழா­மல் முடிந்­தது. பிற்­பாதி ஆட்­டம் தொடங்­கிய 10வது நிமி­டத்­தில் புருனோ ஃபெர்னாண்­டஸ் கோல் போட்டு மேன்­யூ­விற்கு வெற்­றி­யைப் பெற்­றுத் தந்­தார்.

முன்னதாக, ஆண்டனி எலங்கா உதைத்த பந்தைக் கோலாகாமல் தடுத்துவிட்டார் சவுத்ஹேம்டன் கோல்காப்பாளர் கேவின் பஜுனு.

மேன்யூ வீரர் கிறிஸ்டியன் எரிக்சனின் கோல் முயற்சியை மத்திய திடல் வீரர் அர்மெல் பெல்லா கோட்சாப் தடுத்தார்.

60 மில்லியன் பவுண்டுக்கு ரியால் மட்ரிட் குழுவில் இருந்து மேன்யூவிற்கு வந்த கேசிமரோ இந்த ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கினார்.