வெற்றிக் கனியைச் சுவைத்த ஆஸ்டன் வில்லா, ஃபுல்ஹம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களில் ஆஸ்டன் வில்லாவும் ஃபுல்ஹமும் வெற்றியைப் பதிவு செய்து தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன.

சவுத்ஹேடனுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா வெற்றி பெற்றது.

கடந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் ஏற்பட்ட தவிப்புக்கு இந்த வெற்றி முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.

வில்லாவின் வெற்றி கோலை ஜேகப் ரேம்சே போட்டார். இதுவே வில்லாவுக்காக இப்பருவத்தில் அவர் போட்ட முதல் கோலாகும்.

இந்த கோலை அவர் 41வது நிமிடத்தில் போட்டார். ஆட்டத்துக்கு முன்பு அண்மையில் காலமான எலிசபெத் அரசியாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பிறகு, அர­சி­யா­ராக அவர் 70 ஆண்­டு­க­ளுக்­குப் பதவி வகித்­த­தைக் கௌர­விக்­கும் வகை­யில் ஆட்­டத்­தின் 70வது நிமி­டத்­தில் 'காட் சேவ் தி குவீன்' என விளை­யாட்­ட­ரங்­கத்­தில் கூடி­யி­ருந்­தோர் பாடி­னர்.

மற்­றோர் ஆட்­டத்­தில் நாட்­டின்­ஹம் ஃபாரஸ்ட் குழுவை 3-2 எனும் கோல் கணக்­கில் ஃபுல்ஹம்

வீழ்த்­தி­யது.

ஆட்­டத்­தில் முன்­னிலை வகித்து, சாத­க­நிலையை நழு­வ­விட்டு தோற்­கும் பழக்­கம் ஃபாரஸ்ட் குழுவை விட்­டுச் செல்­வ­தாக இல்லை. இவ்­வாறு இரண்­டா­வது முறை­யாக அது தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கி

உள்­ளது.

ஆட்­டத்­தின் 11வது நிமி­டத்­தில் கோல் போட்டு ஃபாரஸ்ட் முன்­னிலை வகித்­தது. ஆனால், மனந்­த­ள­ரா­மல் விளை­யா­டிய ஃபுல்ஹம் அடுத்­த­டுத்து கோல்­

க­ளைப் போட்டு 3-1 எனும் கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது. 77வது நிமி­டத்­தில் ஃபாரஸ்ட் தனது இரண்­டா­வது கோலைப் போட்­டது.

ஆனால், அக்­கு­ழு­வால் இறுதி வரை ஆட்­டத்­தைச் சமன் செய்ய முடி­யா­மல் போக, ஃபுல்ஹம் வாகை சூடி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!