15 வயது பிரிமியர் லீக் வீரர் நுவானெரி

15 வயது பிரிமியர் லீக் வீரர் நுவானெரி

1 mins read
e14ab2ed-7b33-4fc6-ace5-367b8c6cb9a0
இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் ஆக இளம் வீரர் என்ற பெருமை 15 வயது ஈத்தன் நுவானெரியைச் சேரும். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் ஆக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆர்சனல் குழுவின் 15 வயது விளையாட்டாளர் ஈத்தன் நுவானெரி.

ஞாயிற்றுக்கிழமையன்று (18 செப்டம்பர்) ஆர்சனலும் பிரென்ஃபர்டும் மோதிய லீக் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நுவானெரி மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார்.

இதற்கு முன்பு லிவர்பூலின் ஹார்வி எலியட்தான் பிரிமியர் லீக்கின் ஆக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.

லீக்கில் முதன்முறையாகக் களமறங்கியபோது எலியட்டுக்கு வயது 16.

பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்று லீக் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது நுவானெரியின் ஆர்சனல்.