அற்புதப் பயணம்: ஃபெடரர் உருக்கம்

லண்­டன்: உல­கின் முன்­னாள் முதல்­நிலை டென்­னிஸ் ஆட்­டக்­கா­ர­ரான சுவிட்­சர்­லாந்­தின் ரோஜர் ஃபெடரர், 41, அவ்­வி­ளை­யாட்­டி­ல் இ­ருந்து கண்­ணீ­ரு­டன் விடை­பெற்­றார்.

திட­லில் தமது நீண்­ட­கால எதி­ரி­யாக விளங்­கிய ஸ்பெ­யி­னின் ரஃபாயல் நடா­லு­டன் இணைந்து நேற்று முன்­தி­னம் பங்­கேற்ற லேவர் கிண்ண இரட்­டை­யர் ஆட்­டமே ஃபெடரரின் கடைசி ஆட்­ட­மாக அமைந்­தது.

ஐரோப்­பி­யக் குழு­விற்­காக இணைந்து ஆடிய இவர்­கள், உல­கக் குழு­வின் ஃபிரான்­சிஸ் டியஃபோ-ஜேக் சாக் இணை­யி­டம் 6-4, 6-7, 9-11 என்ற செட் கணக்­கில் தோற்­றுப்­போ­யி­னர்.

லண்­ட­னின் ஓ2 அரங்­கில் நடந்த இந்த ஆட்­டத்­திற்­கான 17,500 நுழை­வுச்­சீட்­டு­களும் விற்­றுத்­தீர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

முழங்­கால் காயம் கார­ண­மாக 2021 விம்­பிள்­டன் பொது விரு­துப் போட்­டிக்­குப் பிறகு ஃபெடரர் விளை­யா­டி­யது இதுவே முதன்­முறை.

"இது அற்­பு­த­மான நாளாக அமைந்­தது. நான் மகிழ்ச்­சி­யா­கவே உள்­ளேன். மிகுந்த நெருக்­க­டி­யாக உண­ர­வில்லை. சிறந்த விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு, சகாப்­தங்­க­ளுக்கு முன்­பாக நடா­லு­டன் இணைந்து ஆடி­யது மிக்க மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார் ஃபெடரர்.

இது­நாள்­வரை தமக்­குப் பேரா­த­ர­வாக விளங்­கிய தம் மனை­விக்­கும் பெற்­றோ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்ட ஃபெடரர், "இது ஒரு கொண்­டாட்­டம்­போல் தோன்­று­கிறது. இது ஓர் அற்­பு­த­மான பய­ணம்," என்­றும் சொன்­னார்.

திட­லில் தங்­க­ளது ஆட்­ட­முறை முற்­றி­லும் எதி­ரா­னது எனக் குறிப்­பிட்ட நடால், ஆனா­லும் தனிப்­பட்ட முறை­யில் தங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­முறை நாளுக்­கு­நாள் மேம்­பட்டு வரு­கிறது என்­றும் சொன்­னார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்­டங்­களை வென்­றோர் பட்­டி­ய­லில் ஃபெடரர் (20) மூன்­றாம் நிலை­யில் இருக்­கி­றார். நடால் (22) முத­லி­டத்­தி­லும் ஜோக்­கோ­விச் (21) இரண்­டா­மி­டத்­தி­லும் உள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!