பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

1 mins read
Google News Preferred Icon

கராச்சி: பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்றாவது டி20 போட்டியில் 63 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. இதனையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவ்வணி 2-1 என முன்னிலை பெற்றது. வில் ஜேக்ஸ் (40), பென் டக்கெட் (70), ஹேரி புரூக் (81) சிறப்பாக ஆட, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 221 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 158 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது.