காற்பந்து: இத்தாலியிடம் தோற்று வெளியேறியது இங்கிலாந்து

காற்பந்து: இத்தாலியிடம் தோற்று வெளியேறியது இங்கிலாந்து

1 mins read

மிலான்: நடப்பு யூரோ கிண்ண வெற்­றி­யா­ள­ரான இத்­தா­லி­யி­டம் 1-0 என்ற கோல் கணக்­கில் தோற்­ற­தால் ஐரோப்­பிய நேஷன்ஸ் லீக் காற்­பந்­துத் தொட­ரின் 'ஏ' லீக்­கில் இருந்து வெளி­யேறி, ''பி' லீக்­கிற்­குத் தள்­ளப்­பட்­டது இங்­கி­லாந்து அணி.

ஹங்­கேரி, இத்­தாலி, ஜெர்­மனி ஆகிய குழுக்­க­ளு­டன் 'ஏ' லீக்­கின் 'ஏ3' பிரி­வில் இங்­கி­லாந்து இடம்­பெற்­றுள்­ளது. இது­வரை ஐந்து ஆட்­டங்­களில் விளை­யா­டி­யுள்ள அவ்­வணி, ஒன்­றில்­கூட வெற்றி பெற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அத்­து­டன், அவ்­வணி ஒரு கோலை மட்­டுமே போட்டு, ரசி­கர்­களை ஏமாற்­றி­யது.

வரும் நவம்­பர் மாதம் கத்­தா­ரில் உல­கக் கிண்­ணப் போட்­டி­கள் தொடங்­க­விருக்கும் நிலை­யில், இங்­கி­லாந்து அணி­யின் இந்த மோச­மான செயல்­பாடு அதன் பயிற்று­விப்­பா­ளர் கேரத் சௌத்­கேட்­டிற்கு நெருக்­க­டியை ஏற்­படுத்தி­யுள்­ளது.

இங்­கி­லாந்து அணி­யின் தோல்­விக்­குத் தாம் பொறுப்­பேற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறிய சௌத்­கேட் தமது அணி­யால் கோல­டிக்க முடி­யா­த­தற்­குக் கார­ணம் கூறு­வது கடி­னம் என்று சொன்­னார்.