விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி சமநிலை

லண்டன்: யுயேஃபா நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன.

இந்த A3 பிரிவு ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் கோல் மழை பொழிந்தது.

71வது நிமிடத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி முன்னணி வகித்தது.

83வது நிமிடத்திற்குள் 3-2 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது இங்கிலாந்து.

87வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

லூக் ஷோ, மேசன் மெளன்ட், ஹேரி கேன் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர்.

பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் அணித்தலைவர் கேன்.

ஜெர்மனியின் கோல்களில் இரண்டைப் போட்டவர் காய் ஹாவர்ட்ஸ்.

பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி மற்றொரு கோலைப் போட்டார் இல்க்காய் குண்டோகன்.

கடந்த சில வாரங்களாக கோல் போடவே சிரமப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் நன்கு மீண்டு வந்தது.

எனினும், இவ்வாண்டு அரங்கேறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செய்ய அணி நன்கு மேம்படவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!