இவ்வாண்டின் சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து விருதை அல்பிரக்ஸ் நிகாட்டா குழு கைப்பற்றியுள்ளது.
நேற்று முன்தினம் ஜாலான் புசார் விளையாட்டாரங்கில் நடைபெற்ற ஓர் ஆட்டத்தில் அது தனது நெருங்கிய போட்டிக் குழுவான லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவை 4-2 என்று கோல் கணக்கில் தோற்கடித்து பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.
அல்பிரக்ஸ் குழுவின் கோடாய் டனாக்கா மூன்று கோல்களைப் போட்டு, தனது குழுவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.