இன்று முதல் டி20 ஆரவாரம்

இன்று முதல் டி20 ஆரவாரம்

2 mins read
9e6fd2fa-88d0-4c1c-bfc3-04c352c5147a
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடிய நிகழ்வு. படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: கடந்த சில வாரங்­க­ளாக நீடித்த கிரிக்­கெட் ரசி­கர்­களின் ஏக்­கம் இன்று தீர­வுள்ளது. இவ்­வாண்­டின் ஆண்­கள் டி20 உல­கக் கிண்­ண கிரிக்கெட் போட்டி ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தொடங்­க­வுள்­ளது. இன்று நடை­பெ­ற­வுள்ள தகுதிச் சுற்று ஆட்­டத்­தில் 'ஏ' பிரி­வில் இலங்­கை­யும் நமி­பி­யா­வும் கள­மி­றங்­கு­கின்­றன.

அண்­மை­யில் ஆசிய கிண்­ணத்­தைக் கைப்­பற்­றிய இலங்கை படிப்­படி­யாக முன்­னே­றி­யுள்­ளது. யாரும் எதிர்­பா­ராத வண்­ணம் இலங்கை டி20 உல­கக் கிண்­ணத்தை வெல்­லக்­கூ­டும் என்று சில தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர்.

'ஏ' பிரி­வின் மற்­றோர் ஆட்­டத்­தில் நெதர்­லாந்­தும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­களும் மோது­கின்­றன. 'பி' பிரி­வில் அயர்­லாந்து, ஸ்காட்­லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸிம்­பாப்வே ஆகி­யவை இடம்­பெ­று­கின்­றன. இவ்­விரு பிரி­வு­க­ளி­லும் முதல் இரண்டு இடங்­க­ளைப் பிடிக்­கும் அணி­கள் 'சூப்­பர் 12' சுற்­றுக்கு முன்­னே­றும்.

ஏற்­கெ­னவே 'சூப்­பர் 12' சுற்­றுக்­குத் தகு­தி­பெற்ற எட்டு அணி­களில் பரம எதி­ரி­க­ளான இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் அடங்­கும். 'சூப்­பர் 12' சுற்­றின் இரண்­டாம் பிரி­வில் இடம்­பெ­றும் இவ்­விரு அணி­களும் இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று மோதும்.

அந்த ஆட்­டத்­தில் விளை­யா­ட­வுள்ள வீரர்­களை இப்­போதே தேர்ந்­தெ­டுத்­து­விட்­ட­தாக இந்­திய அணித் தலை­வர் ரோகித் சர்மா தெரி­வித்­துள்­ளார். அணியை நன்கு தயார்­ப்ப­டுத்த முன்­ன­தா­கவே முடி­வெ­டுத்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

'சூப்­பர் 12' இரண்­டாம் பிரி­வில் இவ்­விரு அணி­க­ளு­டன் தற்­போதைக்கு பங்­ளா­தே­ஷும் தென்­னாப்­பி­ரிக்­கா­வும் இடம்­பெ­று­கின்­றன. முதல் பிரி­வில் ஆப்­கா­னிஸ்­தான், ஆஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூசி­லாந்து ஆகி­யவை உள்­ளன.

இதற்­கி­டையே, டி20 ஆண்­கள் உல­கக் கிண்­ணப் போட்டியில் பங்­கேற்கும் அனைத்து அணித் தலை­வர்­களும் ஒன்­று­கூ­டி­யுள்­ள­னர். டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­யைத் தொடங்­கி­வைக்­கும் நிகழ்­வாக 'கேப்­டன்ஸ் டே' எனப்­படும் 'அணித்­த­லை­வர் தினம்' மெல்­பர்­னில் கொண்­டா­டப்­பட்­டது.