'லிவர்பூல்தான் எங்களுக்கு ஆக அதிக போட்டி தரும் குழு'

'லிவர்பூல்தான் எங்களுக்கு ஆக அதிக போட்டி தரும் குழு'

2 mins read
4ec77755-1a32-498e-993e-9c2736a98640
சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா (இடது), லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

லிவர்­பூல்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் லிவர்­பூல் தற்­போது சிர­மப்­பட்­டுக்­கெண்­டி­ருந்­தா­லும் அதுவே லீக் கிண்­ணத்தை வெல்ல மான்­செஸ்­டர் சிட்­டிக்கு ஆக அதிக போட்டி தரக்­கூ­டிய குழு என்று சிட்டி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா கூறி­யுள்­ளார். இரு குழுக்­களும் லீக்­கில் இன்று மோது­கின்­றன.

"அவர்­க­ளின் ஆற்­றல் என்­ன­ என்­பது எனக்­குத் தெரி­யும், எங்களது ஆற்­ற­லைப் பற்றி அவர்­களுக்­கும் தெரி­யும். லீக் பரு­வத்­தில் மூன்றே ஆட்­டங்­கள் எஞ்­சி­யி­ருக்­கும் சூழல் ஏற்­பட்­டால் அவர்­களால் முத­லி­டத்­தைப் பிடிக்­க­மு­டி­யாது என்று நான் சொல்லிவிடுவேன். ஆனால் பரு­வம் நிறை­வ­டைய இன்­னும் பல ஆட்­டங்­கள் எஞ்­சி­யுள்­ளன, உல­கக் கிண்­ணப் போட்டி வேறு நடை­பெ­ற­வுள்­ளது. அத­னால் என்ன வேண்டு­மா­னா­லும் நடக்­க­லாம்," என்று கார்­டி­யோலா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

லீக் பட்­டி­ய­லில் சிட்டி இரண்­டாம் இடத்­தில் உள்­ளது. சிட்­டி­யை­விட 13 புள்­ளி­கள் குறை­வாக எடுத்­துள்ள லிவர்­பூல் பட்­டி­ய­லில் 11வது இடத்­தில்­தான் உள்­ளது.

எனி­னும், இன்று நடை­பெ­ற­வுள்ள ஆட்­டத்­தில் லிவர்­பூல் வென்­றால் திடீ­ரென அதன் நிலை மாறி­யுள்ள ஓர் உணர்வு பிறக்­கும். ஆனால் சிட்­டியை வெல்­வது மட்டு­மின்றி அதன் நட்­சத்­தி­ரம் எர்­லிங் ஹாலண்­டைக் கோல் போட­வி­டா­மல் தடுப்­ப­தும் லிவர்­பூல் எதிர்­கொள்­ளும் இமா­லய சவால்­கள்.

இருந்­தா­லும், சிட்­டி­யை­யும் திக்கு­முக்­கா­டச் செய்­யும் ஆற்­றல் உள்ள ஒரு குழு என்­றால் அது லிவர்­பூல்­தான் என்ற கருத்து கடந்த சில ஆண்­டு­க­ளாக இருந்து வந்­துள்­ளது.

"இந்த ஆட்­டத்­திற்­குக் குழுவை தயார்­ப்ப­டுத்­து­வது நான் விரும்­பிச் செய்­யும் ஒன்று. ஆனால் காற்­பந்­தில் நாம் சந்­திக்­கக்­கூ­டிய ஆகப் பெரிய சவால் இது­வா­கத்­தான் இருக்­க­மு­டி­யும்," என்று லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப் சொன்­னார். அதே வேளை­யில், பண பலம் இருந்­தால் எதை­யும் சா­திக்­க­லாம் என்­ப­தைச் சொல்லி சிட்­டியை இடித்­தும் காட்­டி­னார் கிளோப்.

சிர­மமே இல்­லா­மல் கோல்­களைக் குவிக்­கும் சிட்டி இதர குழுக்­களை அச்­சு­றுத்­தும் வண்­ணம் விளை­யா­டு­கிறது. அதே வேளை­யில் எல்லா குழுக்­க­ளை­யும் வெல்­லவே சிர­மப்­ப­டு­கிறது லிவர்­பூல். எனி­னும், யூயேஃபா சாம்­பியன்ஸ் லீக்­கில் சென்ற வாரம் ரேஞ்­சர்ஸ் குழுவை 7-1 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது லிவர்­பூ­லுக்­குப் புத்­து­யிர் தரக்­கூ­டும்.