கோபன்ஹேகன்: டென்மார்க் பொது விருது பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் நட்சத்திர வீரர் லோ கியன் இயூ தகுதி பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு
காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டர் அக்சல்சனை அவர் 21-17, 21-10 என வீழ்த்தினார்.
ஆட்டத்தை வெறும் அரை மணி நேரத்தில் லோ கைப்பற்றினார்.
உலகப் பூப்பந்து வீரர்கள் தர
வரிசையில் அக்சல்சன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்
பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 39 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அக்சல்
சனின் வெற்றிப் பயணத்தை லோ முடிவுக்குக் கொண்டு வந்தார்.
"அக்சல்சன் மிகச் சிறந்த ஆட்டக்காரரர். எனவே, அவரைத் தோற்கடிப்பது மிகப் பெரிய சாதனை.
"இருப்பினும், எந்த ஓர் ஆட்டக்காரராலும் களமிறங்கும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற முடியாது. அக்சல்
சனும் மனிதர்தான். அவர் மிகவும் மதிக்கத்தக்க மனிதர்," என்று வெற்றிக்குப் பிறகு லோ கூறினார்.
அரையிறுதியில் அவர் பரமவைரியான மலேசியாவின் லீ சி ஜியாவுடன் மோதுகிறார்.

