கெவின் டி பிரய்னவின் அபார கோலால் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

கெவின் டி பிரய்னவின் அபார கோலால் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

1 mins read

லண்­டன்: இங்­கி­லி‌ஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தாட்­டம் ஒன்­றில் மான்­செஸ்­டர் சிட்­டியை கோல் போட­வி­டக்­கூடாது என்ற முடி­வு­டன் விளை­யா­டி­யது லெஸ்­டர்.

ஆனால், அதி­ர­டி­யாக கோல் போட்டு லெஸ்­டர் குழுவை மண்­ணைக் கவ்வச்செய்­தார் மான்­செஸ்­டர் சிட்­டி­யின் கெவின் டி பிரய்ன.

ஆட்­டத்­தின் பெரும்­ப­குதி சிட்­டி­யின் ஆதிக்­கத்­தில் இருந்­த­போதும் அக்­கு­ழு­வால் கோல் போட­மு­டி­ய­வில்லை.

காயம் கார­ண­மாக எர்­லிங் ஹாலண்ட் விளை­யாட முடி­யா­மல் போன­தும் சிட்டி குழு­விற்­குப் பின்­ன­டை­வாகக் கரு­தப்­பட்­டது.

லெஸ்­ட­ரும் எதி­ர­ணியைத் தடுப்­ப­தி­லேயே கவ­ன­மாக இருந்­தது. எனவே, முற்­பாதி ஆட்­டத்­தில் கோல் எது­வும் விழ­வில்லை.

பிற்­பாதி ஆட்­டம் தொடங்­கிய நான்­கா­வது நிமி­டத்­தில் கிடைத்த ஃபிரீகிக் வாய்ப்­பில் கெவின் டி பிரய்ன போட்ட அப­ரா­மான கோல் சிட்­டியை 1-0 என்ற கோல்­க­ணக்­கில் வெற்றிபெறச் செய்­தது.

சிட்­டி­யின் கோலைச் சமன் செய்­யும் லெஸ்­ட­ரின் முயற்சி பல­ன­ளிக்­க­வில்லை.

53வது நிமி­டத்­தில் லெஸ்­ட­ர் வீரர் யூரி உதைத்த பந்து கோல்­கம்­பத்­தில் பட்­டுத் திரும்­பி­யது.

லெஸ்டர் வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் திறம்படச் செயல்பட்ட தாக அதன் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ் பாராட்டினார்.