தோஹா: உலக் கிண்ண காற்
பந்துப் போட்டி இம்மாதம் 20ஆம் தேதியன்று கத்தாரில் தொடங்குகிறது.
போட்டி தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் உலகக் கிண்ணப் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர்.
பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து போன்ற குழுக்களின் சீருடைகளை அணிந்து தோஹாவில் உள்ள வாட்டர்ஃபிரண்ட்
பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் அலையலையாய் திரண்டனர்.
பொதுவாக அந்தப் பகுதிகளில் இதுபோன்ற பேரணிகளுக்கு
அனுமதி வழங்கப்படாது.
ஆனால் உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொண்டாட்டத்தில் இறங்கிய வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் காற்பந்து ரசிகர்கள் அதிகம்.
அதிலும் கத்தாரில் பணிபுரியும் கிட்டத்தட்ட 750,000 இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கத்தாரின் மக்கள்தொகை 2.8 மில்லியன்.
சமூக ஊடகம் மூலம் நேற்றைய உலகக் கிண்ணப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
"காவல்துறையிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம். இது எங்களுக்குரிய நாள். நாங்கள் கொண்டாடி மகிழ்கிறோம்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காற்பந்து என்றால் உயிர்.
"உலகக் கிண்ண காற்பந்தாட்டங்களை விளையாட்டரங்கங்
களுக்குச் சென்று நேரில் காண அவர்களில் பலர் நுழைவுச்சீட்டுகளை வாங்கிவிட்டனர்.
அரபு நாட்டில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை. அதே
வேளையில் இப்போட்டி தென் ஆசியாவில் நடைபெறுவது போலத் தோன்றுகிறது," என்று பேரணியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
கொண்டாட்டத்தில் ஈடுபட்டோர் அணிந்திருந்த பிரேசில், அர்ஜெண்டினா சீருடைகளில் அக்குழுக்களின் ஆட்டக்காரர்களுடைய பெயர்களுக்குப் பதிலாக இந்தியப் பெயர்கள் இருந்தன.
தயாராகும் குழுக்கள்
இதற்கிடையே, அடுத்த சில நாள்களில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் பங்கெடுக்கும் குழுக்கள் கத்தார் வந்தடையும்.
அதற்கு முன்பு ஆட்டக்காரர்கள் பட்டியலை அவை உறுதி செய்கின்றன.
நட்சத்திர வீரர் சொன் ஹியோங் மின் காயமடைந்துள்ளபோதிலும் தென்கொரியக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் தென்கொரியா விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் அவரால் களமிறங்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

