தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை முன்னிட்டு மற்ற குழுக்களுக்கு முன்பாகவே அமெரிக்கக் குழு கத்தாரைக் கடந்த வியாழக்கிழமையன்று சென்றடைந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அமெரிக்கா போட்டியிடுகிறது. இம்மாதம் 29ஆம் தேதியன்று அது ஈரானுடன் மோதுகிறது. இது காற்பந்து அளவில் மட்டுமன்றி அரசியல் அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஆட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா இம்மாதம் 21ஆம் தேதியன்று வேல்ஸ் குழுவைச் சந்திக்கிறது. அதை அடுத்து இம்மாதம் 25ஆம் தேதியன்று இங்கிலாந்துடன் அது மோதுகிறது.
இதற்கிடையே, ஆட்டங்கள் தொடங்க அமெரிக்கக் குழுவின் பயிற்றுவிப்பாளர் கிரேக் பெர்ஹால்தர் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.
"எங்கள் குழு திறமைவாய்ந்த குழு என்று உறுதியாக நம்புகிறோம். ஆட்டக்காரர்களிடையே நல்ல குழு உணர்வு இருக்கிறது. களமிறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவைப் பிரதிநிதிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கத்தாரில் உள்ள எங்கள் ரசிகர்
களின் ஆதரவு எங்களை மெய்
சிலிர்க்க வைக்கிறது. அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரி
வித்துக்கொள்கிறோம்.

