ரக்பி உலகக் கிண்ணம்: நியூசிலாந்து மகளிர் வெற்றி

ஆக்­லாந்து: மக­ளி­ருக்­கான உல­கக் கிண்ண ரக்பி போட்­டி­யில் நியூ­சி­லாந்து வெற்றி பெற்று கிண்­ணம் ஏந்­தி­யுள்­ளது.

நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்தை அது 34-31 எனும் புள்­ளிக் கணக்­கில் தோற்­க­டித்­தது. கிண்­ணத்தை இங்­கி­லாந்து எளி­தில் வெல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் இறுதி ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்து அதற்­குக் கடு­மை­யான சவா­லாக விளங்­கி­யது.

தப்­பாட்­டம் கார­ண­மாக இங்­கி­லாந்­தின் லீடியா தாம்­சன் ஆட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்.

இத­னால் ஆட்­டத்­தின் பெரும் பகு­தியை வெறும் 14 ஆட்­டக்­கா­ரர்­க­ளு­டன் இங்­கி­லாந்து விளை­யா­டி­யது.

இருப்­பி­னும், வெறும் 10 நிமி­டங்­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்த நிலை­யில் இரண்டு புள்­ளி­கள் முன்­னி­லை­யு­டன் கிண்­ணத்தை நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது இங்­கி­லாந்து.

இந்­நி­லை­யில், ஆட்­டம் முடிய ஒன்­பது நிமி­டங்­கள் இருந்த நிலை­யில் நியூ­சி­லாந்து அபார­மாக விளை­யாடி ஐந்து புள்­ளி­க­ளைப் பெற்­றது.

இறுதி வரை முன்­னி­லை­யைத் தக்­க­வைத்­துக்­கொண்ட நியூ­சி­லாந்து வெற்றி பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!