லண்டன்: லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பிற்கு ஓர் ஆட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ஆம் தேதி மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரைக் கடிந்துகொண்டு அனைவரும் பார்க்கும் வகையில், கேட்கும் வகையில் ஆட்டம் நடைடெற்றுக்கொண்டிருந்த திடலுக்கு மிக அருகில் சென்று நடுவரைக் கடுமையாக விமர்சித்ததற்காக கிளோப்பிற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு முதலில் 30,000 பவுண்டு ($48,600) அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதை எதிர்த்து இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் மேல்முறையீடு செய்ததும் கிளோப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது.
சவுத்ஹேம்டனுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், நிர்வாகிகளுக்கான இருக்கையில் அமர்ந்து தமது ஆட்டக்காரர்
களுக்கு வழிகாட்ட கிளோப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது.
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தின்போது நிர்வாகி
களுக்கான விதிமுறைகளை மீறியதை கிளோப் ஒப்புக்கொண்டார்.

