செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

நைஜீரியாவை வீழ்த்திய போர்ச்சுகல்

லிஸ்பன்: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் நைஜீரியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது போர்ச்சுகல்.

மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் புரூனோ ஃபெர்னாண்டஸ் இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார். கொன்சாலோ ராமோஸ், ஜோவாவ் மாரியோ ஆகியோர் மற்ற இரண்டு கோல்களைப் போட்டனர்.

பெண்களுக்கான ஃபார்முலா 1

அபுதாபி: பெண்களுக்கென்றே வாகனப் பந்தயத் தொடரை ஃபார்முலா 1 தொடங்கியுள்ளது.

பெண்கள் எஃப் 1 தொடர் அடுத்த ஆண்டு தொடங்கும். அதில் பங்கேற்க இளம் பெண்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எஃப் 1 அகாடமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய பந்தயத் தொடரில் ஐந்து குழுக்கள் இடம்பெறும். அக்குழுக்கள் தற்போது ஃபார்முலா 2, ஃபார்முலா 3 ஆகிய தொடர்களில் இடம்பெறுபவை.

ஒவ்வொரு குழுவும் மூன்று வாகனங்களை நிர்வகிக்கும் என்று ஃபார்முலா 1 தெரிவித்தது.

ஓட்டுநர் ஒவ்வொருவரும் 150,000 யூரோ தொகையை நிதியாகப் பெற்றிருக்கவேண்டும். அதே தொகையை ஃபார்முலா 1 அமைப்பும் வழங்கும். தொடரில் இடம்பெறும் குழுக்கள் தேவைப்படும் எஞ்சிய தொகையைத் திரட்டும்.

புதிய தொடருக்குத் தேவையான மொத்தத் தொகை 2.25 மில்லியன் யூரோ.