டாக்கார்: செனகல் நட்சத்திரம் சாடியோ மானே இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமுற்ற மானே குணமடையாமல் இருப்பது அதற்குக் காரணம்.
ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவிற்கு ஆடும்போது 30 வயது மானே காயமுற்றார்.
அதற்குப் பிறகு அவர் குணமடைந்து போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கிடையே, அர்ஜென்டினா அணியில் காயமுற்ற நிக்கலஸ் கொன்சாலசுக்குப் பதிலாக ஏஞ்சல் கொரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாவ்லோ டைபாலா உள்ளிட்ட விளையாட்டாளர்களும் காயமுற்றிருக்கிறார்களா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.

