முத்திரை பதிக்கத் துடிக்கும் போர்ச்சுகல்

முத்திரை பதிக்கத் துடிக்கும் போர்ச்சுகல்

1 mins read

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி வர­லாற்­றில் இது­வரை கிண்­ணத்தை வென்­ற­தில்லை போர்ச்­சு­கல். இரு­முறை அரை­யி­று­திச் சுற்­று­வரை சென்­றி­ருக்­கிறது.

இவ்­வாண்­டின் போட்­டி­யில் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றக்­கூ­டிய விளை­யாட்­டா­ளர்­கள் போர்ச்­சு­க­லி­டம் உள்­ள­னர். எனி­னும், அதன் நட்­சத்­தி­ரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வைச் சூழ்ந்­தி­ருக்­கும் பெரும் சர்ச்சை அணி­யின் வாய்ப்­பு­க­ளைப் பாதிக்­கக்­கூ­டும் என்ற அச்­ச­மும் நில­வு­கிறது. அண்­மைக் கால­மாக அவர் அவ்­வ­ளவு சிறப்­பாக விளை­யா­ட­வும் இல்லை. 37 வயது ரொனால்­டோ­விற்கு உல­கக் கிண்­ணத்தை வெல்ல இதுவே கடைசி வாய்ப்­பாக இருக்­க­லாம்.

அவரை மைய­மா­கக் கொண்டு­தான் இந்த போர்ச்­சு­கல் அணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் பென்­ஃபிக்­கா­வின் கொன்­சாலோ ராமோஸ் உள்­ளிட்ட வளர்ந்­து­வ­ரும் நட்­சத்­தி­ரங்­கள் ரொனால்­டோ­வின் இடத்­தைப் பிடிக்­கக்­கூ­டி­ய­வர்­கள். அட்­லெட்­டிக்கோ மட்­ரிட்­டின் ஜோவாவ் ஃபெலிக்­சும் சிறப்­பாக விளை­யா­டக்­கூ­டி­ய­வர்.

2002ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் நட்­சத்­தி­ரப் பட்­டா­ளத்­தைக் கொண்­டி­ருந்த போர்ச்­சு­கல் முதல் சுற்­றைத் தாண்­டத் தவ­றி­யது. அதற்­குப் பிறகு அதிக நட்­சத்­தி­ரங்­கள் இல்­லா­ம­லேயே 2016ஆம் ஆண்டு முதன்­மு­றை­யாக யூரோ கிண்­ணத்தை வென்­றது. அக்­கிண்­ணத்தை வென்று­தந்த பயிற்­று­விப்­பா­ளர் ஃபெர்னாண்டோ சான்­டோஸ்தான் இன்­றும் போர்ச்­சு­கலை வழி­ந­டத்து­கி­றார்.

இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் முதல் சுற்­றில் போர்ச்­சு­கல் 'எச்' பிரி­வில் கள­மி­றங்­க­வுள்­ளது. கானா, தென்­கொரியா, உரு­குவே ஆகிய அணி­களும் அப்­பி­ரி­வில் உள்­ளன.

போர்ச்­சு­கல் எளி­தில் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனாலும், இதர மூன்று அணி­க­ளை­யும் குறைத்து மதிப்­பி­ட­மு­டி­யாது.